பக்கம் எண் :

கற்பியல் சூ.519
 

நெஞ்சு  தளையவிழ்தலாவது-தலைவியைத் தலைவன்  கண்ணுற்ற ஞான்று தலைவன் மாட்டு உளதாகிய
பெருமையும் உரனும் தலைவிமாட்டு உளதாகிய அச்சமும்  நாணும் மடனும்  ஏதுவாக  இயற்கைப்புணர்ச்சி
இடையீடுபட்டுழி வேட்கை தணியாது வரைந்தெய்துங்காறும் இருவர்  மாட்டும்  கட்டுண்டு நின்ற நெஞ்சம்
கட்டுவிடப்படுதல்.    இயற்கைப்    புணர்ச்சி   புணர்ந்த   தலைவன்    அலரறிவுறுக்கப்பட்டு   நீங்கி
வரைந்தெய்துங்காறும்  புணர்ச்சி வேட்கையாற் செல்கின்ற நெஞ்சினை இருவரும்   வேட்கை தோற்றாமல்
தளைக்கப்பட்டதனைத் தளை என்றலும் ஒன்று. இவையிரண்டினும் மிகுதி
1 பொருளாகக் கொள்க.
  

உதாரணம்
  

“உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை
பெருஞ் சோற்றமலை நிற்ப நிரைகால்
தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரி
மனை விளக்குறுத்து மாலைதொடரிக்
கனையிருள் அகன்ற கவின் பெறுகாலைக்
கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்
கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென
உச்சிக் குடத்தர் புத்தகல் மண்டையர்
பொதுசெய் கம்பலை முதுசெம்பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப்
புதல்வர் பயந்த திதலை யவ்வயிற்று
வாலிழை மகளிர் நால்வர்கூடிக்
கற்பினின் வழாஅ நற்பல உதவிப்
பெற்றோர் பெட்கும் பிணையை ஆகென
நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி
பல்லிருங் கதுப்பின் நெல்லொடுதயங்க
வதுவை நன்மணங் கழிந்தபின்றைக்
கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து
பேரிற் கிழத்தி யாகெனத்தமர்தர
ஓரிற் கூடியவுடன்புணர் கங்குற்
கொடும்புறம் வளைஇக்கோடிக் கலிங்கத்து
ஒடுங்கினன் கிடந்தனள் ஓர்புறந்தழீஇ


1. மிகுதி-சிறப்பு. சிறப்புடையதை இங்குப் பொருளாகக் கொள்க என்பது.