பக்கம் எண் :

கற்பியல் சூ.10191
 

இது, பெருமிதங் கூறலின் இளமைப் பருவத்தாள் கூற்றாயிற்று.
  

“ஒண்டொடியாயத் துள்ளுநீ நயந்து
கொண்டனை யென்பவோர் குறுமகள்”

(அகம் 96)
 

எனக் காமஞ் சாலா இளமையோளைக் கூறிற்று.
  

இரட்டுற     மொழிதலென்பதனாற்  பரத்தையரிடத்துப்  புலப்  பட  ஒழுகாது  அவர்    புல்லுதலை
மறைத்தொழுகுதலாற்  காமக்  கிழத்தியர்க்கும்  பிறக்கும்  புலவிக்  கண்ணும்  அவர்க்குக்   கூற்று நிகழு
மெனவும் பொருள் கூறுக.
  

உதாரணம்:
  

“கண்டேனின் மாயங் களவாதல் பொய்ந்நகா”
  

என்னும் மருதக்கலி (90)யுட் காண்க.
  

இல்லோர்  செய்வினை  இகழ்ச்சிக்  கண்ணும்  -  இல்லிடத்திருந்த  தலைவனுந்  தலைவியும் ஊடியும்
உணர்த்தியுஞ் செய்த தொழிலைக் கேட்டு இகழும் இகழ்ச்சிக் கண்ணும்.
  

உதாரணம்:
  

“கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
பழனவாளை கதூஉமூர
னெம்மிற் பெருமொழி கூறித்தம்மிற்
கையுங் காலுந் தூக்கத் தூங்கு
மாடிப் பாவைபோல
மேவன செய்யுந்தன் புதல்வன் றாய்க்கே”
1

(குறுந்-8)
  

“நன்மரங் குழீஇய நனைமுதிர் சாடிப்
பன்னாளரித்த கோயுடை யுடைப்பின்
மயங்கு மழைத்துவலையின் மறுகுடன் பனிக்கும்
பழம்பனெல்லின் வேளூர் வாயி
னறுவிரை தெளித்த நாறிணர்மாலை
பொறிவரியின வண்டூதல கழியு
முயர்பலி பெறூஉ முருகெழு தெய்வம்
புனையிருங் கதுப்பி னீவெய்யோள்வயி
னனையேனாயினணங்குக வென்னென
மனையோட்டேற்று மகிழ்நனாயின்


1. பொருள்: பக்கம் 181-ல் காண்க.