இதனுள், நோய் தாங்கினளென இளமைப் பருவத்து மகிழ்ச்சியும் முதிர்ந்த பருவத்து மறவியுந் தோன்றக் கூறாமையினானும் வழிமுறைத்தாயென்றமையானும் இஃது இடைநிலைப் பருவத்தாள் கூற்று. |
“அவட்கினிதாகி விடுத்தனன் போகித் தலைக்கொண்டு நம்மொடு காயுமற்றீதோர் புலத்தகைப் புத்தேளில்புக்கான்”4 |
(கலி-82) |
என்ற வழிப் ‘புத்தேள்’ என்றதுவும் தலைநின்றொழுகும் இளையோளைக் கூறியது. |
“தந்தை யிறைத்தொடீஇ மற்றிவன்றன் கைக்கட் டந்தாரியாரெல்லாஅ விது; வீஃதொன்று”1 |
(கலி-84) |
என்றாற் போல அவள் கொடுப்பக் கொள்வனவுங் கொள்க.2 |
மறையின்வந்த மனையோள் செய்வினைப் பொறையின்று பெருகிய பருவரற் கண்ணும், மறையின் வந்த தலைவற்கு வேறோர் தலைவியோடு களவொழுக்கம் நிகழ்தலின் அவன் செய்திகளின் வேறுபாட்டால் தமக்குப் புலப்பட வந்த, மனையோள் செய்வினை-மனையோளாதற்குரியவள் தமர் பணித்தலில் தைந்நீராடலும் ஆறாடலும் முதலிய செய்தொழில்களைச் செய்யுமிடத்து, பொறை இன்று பெருகிய பருவரற் கண்ணும் - இவள் தோற்றப் பொலிவால் தலைவன் கடிதின் வரைவனெனக் கருதிப் பொறுத்தலின்றி மிக்க வருத்தத்தின் கண்ணும். |
2-4 முயங்கினாள்; முத்தமிட்டாள்; நோக்கினாள் தலைவன் தன்னைக் கைவிட்ட தன்மையை நினைந்து நினக்கு யாம் என்ன உறவுடையேம்! என்றுகூறி அழகுற நல்லணிகளை யணிந்தனள். மேலும் பெருமானே! மகளிர் கண்கள் பசக்கும்படி நோய் செய்யும் நின் தந்தையின் பரத்தமையைக் கொள்ளாதே என்றாள். அவளுக்கு இனிதாக இருந்து பின்னர் நம்மொடு ஒப்பாளாகத் தன்னை நினைத்துக் கொண்டு நம்மைக் காய்ந்து புலக்கும் தகைமையுடைய இல்லிற் புக்கான் புதல்வன். 1. பொருள்: ஏடி! இவன் தந்தையின் முன்னங்கை யகத்துத் தொடிஎனும் அணியை இப் புதல்வன் கையகத்துத் தந்தார் யார்? என்ன இஃதோர் புதுமை? 2. அவள் கொடுப்பக் கொள்வன- பரத்தை கொடுப்பக் கொள்ளும் பொருள்களும் உண்டு எனக் கொள்க. |