1 பொருள்: பக்கம் 166ல் காண்க. 2 பொருள்: முதிர்ந்த தயிரைப் பிசைந்த மெல்லிய விரலைத் துடைத்த ஆடையை மாற்றாது உடுத்தித் தன் குவளைபோலும் மையுண்ட கண்களில் தாளிப்பின் புகைபொருந்தத் தானே துழாவிச் சமைத்த இனிய புளிக்குழம்பைக் கணவன் மிக இனிது என்று சொல்லி உண்ணுதலால் தலைவியின் முகம் நுண்ணிதாக மகிழ்ச்சி கொண்டது. (இதைத்தோழியோ அன்றி வேறு வாயிலோ தன்னுட் கூறியதாகக் கொள்க). 3 பொருள்: இது செவிலி நற்றாய்க்குக் கூறியது. தோழீ! தன்பெடையைக் கூவும் காட்டுக் கோழிச் சேவலின் பிடரியில் புதல்நீர் துளிக்கும்படியாக உள்ள மலர் மணம்மிக்க முல்லை நிலத்துச் சீறூரில் மகிழ்வுடன் உள்ளாள் நம் மடந்தை. அவள் தலைவன் தேரும் மன்னன் ஏவலால் வேற்றூர் சென்றுவர நேரினும் வினைமுடித்து அங்கேயே தங்காமல் உடன் மீண்டு வந்து விடும். |