பக்கம் எண் :

கற்பியல் சூ.13
 

களவியற் சூத்திரத்துள்,
  

‘இன்பமும் பொருளு மறனு மென்றாங்
கன்பொடு புணர்ந்த’

(களவியல்-க)
  

என்பதனைத் தந்துரைத்து ஐந்திணை மருங்கிற் கற்பெனப்படுவது எனக் கூட்டுக.1
  

அஃதேல்     கொடுப்பக் கொள்வது கற்பாயின் பிரமம் முதலிய எண்வகையும் கொள்க. “கொடுப்போர்
இன்றியும்  கரணம்  உண்டே,  புணர்ந்துடன்  போகிய  காலையான”
2 என்னும்  இது கற்பாகுமோ எனின்,
அவையும்  கற்பாதல்  ஒக்குமேனும்  கந்திருவம் போல  ஒத்த  அன்புடையாராதல்  ஒருதலையன்மையின்
கைக்கிளை   பெருந்திணைப்பாற்படும்.   ஈண்டு   ஐந்திணை   தழுவிய   அகத்திணையே  களவு  கற்பு
எனப்பகுத்தார் என்று கொள்க.
  

நச்சினார்க்கினியர்
  

என்பது  சூத்திரம்.  இவ்வோத்துக்  களவு  கற்பென்னுங்  கைகோளிரண்டினுட் கற்புணர்த்தினமையிற்3
கற்பியலென்னும்  பெயர்த்தாயிற்று.  கற்பியல்  கற்பினது  இயலென  விரிக்க. இயல் - இலக்கணம், அஃது
ஆகுபெயரான்  ஓத்திற்குப்  பெயராயிற்று. அது கொண்டானிற் சிறந்த தெய்வம்  இன்றெனவும்  அவனை
இன்னவாறே  வழிபடுகவெனவும்  இருமுது  குரவர்  கற்பித்தலானும்  ‘அந்தணர்   திறத்துஞ்  சான்றோர்
தேஎத்தும், ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும்’ (146) ஒழுகும் ஒழுக்கந்


1. இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற்
கற்பெனப் படுவது எனக் கூட்டுக.

2. “கொடுப்போர்  இன்றியும்.....காலையான.....கற்பாகுமோ எனின்” என்னும் இவ்வரிகள் தேவையில்லா
இடைச்  செருகலாகும்.   நீக்கித்  தொடர்க.  இது  கற்பாகுமோ  எனின்  என ஒருமையாற் கூறிப்
பின்னர் அவையும் எனப் பன்மையால்  கூறுவது தவறு. அதனால், “அஃதேல்.....கொள்க. அவையும்
கற்பாதல்” எனத் தொடர்க.

3. கற்புணர்த்தினமையின்-கற்பிலக்கணம் உணர்த்தினமையின்.