பக்கம் எண் :


கணபதி துணை
புறப்பொருள் வெண்பாமாலை
மூலமும் உரையும்

கடவுள் வாழ்த்து

1நடையூறு சொன்மடந்தை நல்குவது நம்மேல்
இடையூறு நீங்குவது மெல்லாம்-1புடையூறும்
சேனைமுகத் தாளிரியச் சீறுமுகத் தூறுமதத்
தானைமுகத் தானை நினைத் தால்.
2கண்ணவனைக் காண்கவிரு காதவனைக் 2கேட்கவாய்ப்
பண்ணவனைப் பாட பதஞ்சூழ்க-எண்ணிறைந்த
நெய்யொத்து நின்றானை நீலமிடற் றானையென்
கையொத்து நேர்கூப்புக.

சிறப்புப் பாயிரம்

3மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத்
தென்மலை யிருந்த சீர்சான் முனிவரன்
தன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த
துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்முதற்
5பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த
பன்னிரு 4 படலமும் பழிப்பின் றுணர்ந்தோன்
ஓங்கிய சிறப்பி னுலகமுழு தாண்ட
வாங்குவிற் றடக்கை வானவர் மருமான்

3. 1-4. " அகத்திய னென்னும், அருந்தவ முனிவ னாக்கிய முதனூல், பொருந்தக் கற்றுப் புரைதப வுணர்ந்தோர், நல்லிசை நிறுத்த தொல்காப் பியனும்" (பன்னிரு.) 1-6. " இனிப் பன்னிருபடல முதனூலாக வழிநூல் செய்த வெண்பாமாலை ஐயனாரிதனாரும் இது கூறினார்; என்னை ? 'மன்னிய ......பகர்ந்த' எனப் பாயிரஞ் செய்தற்குடம்பட்டமையினென்பது" (தொல்.மரபு. சூ.94,பேர்.)

(பிரதிபேதம்)
1. "புடையூறு"
2. "கேட்கவாய் பண்ணவனைப் பாடப்பதஞ்"
4. "படலம்"