பக்கம் எண் :

1ஐய னாரித னகலிடத் தவர்க்கு
10மையறு புறப்பொருள் வழாலின்று விளங்க
வெண்பா மாலை யெனப்பெயர் நிறீஇப்
பண்புற மொழிந்தனன் பான்மையிற் 2றெரிந்தே.

என்பது பாயிரம். இதனுட் பாயிரமுரைத்தவெல்லாம் உரைத்துக் கொள்க.

இதன் பொருள்: நின்றுநிலைத்த நன்மையினையுடைய தேவர்கள் வேண்டிக்கொள்ளப் பொதியின் மலையிலிருந்த அழகமைந்த இருடி தன்னிடத்துக் குளிர்ந்த தமிழை வருத்தமின்றியறிந்த கிட்டுதற்கரிய மிக்க புகழினையுடைய தொல்காப்பியனென்னும் ஆசிரியன் முதலான பன்னிருவரான அறிஞரும் பகுதியில் மிகச் சொன்ன பன்னிருபடலமென்னும் நூலினைக் குற்றமின்றியே அறிந்தோன், உயர்ந்த மேம்பாட்டினையுடைய பூமியை முழுதுமாண்ட வளைந்த வில்லைப் பெருத்த கையிலேயுடைய சேரமான்கள் வழியினுள்ளான்; ஐயனாரிதனென்னும் பெயரினையுடையவன், பரந்த நிலத்திலுள்ளவர்க்குக் குற்றமற்ற புறப்பொருளை வழுவுதலின்றியே தெளிய வெண்பாமாலையென்னும் நாமத்தினை நிறுத்தி 3நன்மை மிகச் சொன்னான், முறைமையாலே ஆராய்ந்து என்றவாறு.

ஏகாரம் : ஈற்றசை, பான்மையிற் றெரிந்து பண்புற மொழிந்தனன் ஐயனாரிதனெனக் கூட்டுக. மன்னிய-தெரிந்தவென்றுமாம். முனிவரன்-இருடிகளில் 4 வரனாயுள்ளான்; அவன் அகத்தியனென்றறிக.

சிறப்புப்பாயிரம் முற்றிற்று


முதலாவது
வெட்சிப்படலம்
(சூத்திரம் 1.)

வெட்சி வெட்சி யரவம் விரிச்சி செலவு
வேயே புறத்திறை 5யூர்கொலை யாகோள்
பூசன் மாற்றே புகழ்சுரத் துய்த்தல்
தலைத்தோற் றம்மே தந்துநிறை பாதீ
5டுண்டாட் டுயர்கொடை புலனறி சிறப்பே
பிள்ளை வழக்கே பெருந்துடி நிலையே
கொற்றவை 6நிலையே வெறியாட் டுளப்பட

1. 9-12. "மெய்யினார்........தனவே" (பு.வெ.சூ.18;ப.156.).
(பி-ம்.)
2. 'றெளிந்தே'
3. 'தன்மைமிக'
4. 'வரிட்டனாய்'
5. 'யூர்க்கொலை'
6. 'நிலையொடு'