பக்கம் எண் :

1. வெட்சிப்படலம்

எட்டிரண் டேனை நான்கொடு தொகைஇ
வெட்சியும் வெட்சித் துறையு மாகும்.

என்பது சூத்திரம். என்னுதலிற்றோவெனின், வெட்சித்திணையும் துறையுமாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) வெட்சி, வெட்சியரவம், விரிச்சி, செலவு, வேய், புறத்திறை, ஊர்கொலை, ஆகோள், பூசன்மாற்று, சுரத்துய்த்தல், தலைத்தோற்றம், தந்துநிறை, பாதீடு, உண்டாட்டு, கொடை, புலனறிசிறப்பு, பிள்ளைவழக்கு, துடிநிலை, கொற்றவைநிலை, வெறியாட்டு என இவை இருபதும் வெட்சித்திணையும் துறையுமாம் எ - று.

வெட்சி

வெட்சியென்பது இருவகைத்து;

1மன்னுறு தொழிலும் தன்னுறு தொழிலுமென.
வென்றி வேந்தன் பணிப்பவும் பணிப்பின்றியும்
சென்றி கன்முனை யாதந் தன்று.

(இ - ள்.) வெற்றியினையுடைய அரசன் ஏவவும் ஏவலின்றியும் போய் மாறுபாட்டினையுடைய வேற்றுப்புலத்துப் பசுநிரையைக் கைக்கொண்டது. எ - று.

அவற்றுள்,

1. மன்னுறுதொழில்4வருமாறு :-

(இ - ள்.) முன்புசொன்ன இரண்டனுள்ளும் மன்னுறுதொழில் 5வருமுறைமை. எ - று.

(வ - று.)2மண்டு மெரியுண் மரந்தடிந்3திட்டற்றாக்
கொண்ட கொடுஞ்சிலையன் கோறெரியக்-கண்டே
அடையார் முனையலற வையிலைவேற் காளை
விடையாயங் கொள்கென்றான் வேந்து.

(இ - ள்.) மிகக் கொளுந்தி எரியாநின்ற நெருப்பினுள்ளே மரத்தை வெட்டியிட்டதன்மைத்தாகக் கையிலே வாங்கிக்கொண்ட கொடிய வில்லையுடையவன் அம்பை ஆராயக்கண்டும் பகைவர் போர் கலங்க வியக்கத்தக்க இலைத்தொழில்களாற் சிறந்த வேலினையுடைய காளாய்! ஏற்றையுடைய நிரையைக் கொள்கவென்று சொன்னான் அரசன் எ - று.

யாரை? கொடுஞ்சிலையானை. கண்டுமென உம்மை விரித்துரைக்க. ஏகாரம் : ஈற்றசை. கொண்ட - கொள்ளப்பட்டன; யாவை? நிரை என முற்றாக்கிச் சூத்திரத்திற்கேற்பப் பொருளுரைப்பாருமுளர்.

(1)

2. 7 3 தன்னுறுதொழில் வருமாறு :-

(இ - ள்.) தன்னுறு தொழில் வருமுறைமை எ - று.


1. "தன்னுறு தொழிலே வேந்துறு தொழிலென், றன்ன விருவகைத்தே வெட்சி" (பன்னிரு.); இ.-வி. சூ. 602, மேற்.
2. தக்க. 569, உரை, மேற். 3. பெருங். 3.23 : 20 - 21. (பி - ம்) 4. 'வரலாறு'.
5. 'வருநெறி'. 6. 'திட்டற்றாற்'. 7. 'இனித்தன்னுறு'.