சுரும்பு சூழுமாலை பக்கத்தில் அசைந்துவரப்பார்த்துக் கைக்கொண்ட கல்லினைப் புனலிலேயிட்டது எ-று . வ - று.1காடு கனலக் கனலோன்சினஞ்சொரியக் கூடிய வெம்மை குளிர்கொள்ளப் - பாடி நயத்தக மண்ணி நறுவிரைகொண் டாட்டிக் கயத்தகத் துய்த்திட்டார் கல். (இ - ள்.) கானம் அழல ஆதித்தன் கோபத்தைப்பொழிதலாலே பொருந்தின வெப்பம் தண்ணென ஏத்திநன்மையுண்டாகச் சுத்தி பண்ணிப் பின் நறுநாற்றமுடையனவற்றைக்கொண்டு மஞ்சனமாட்டி வாவியிடத்திலே செலுத்தி அழுத்தினார் கல்லினை எ-று . (10) 250. இதுவுமது ஓங்கியகல் லுய்த்தொழுக்கல் ஆங்கெண்ணினு மத்துறையாகும். (இ - ள்.) உயர்ந்த கல்லினைச் செலுத்தி நிரைத்தலை அவ்விடத்துக் கருதினும் முன்பு சொன்ன துறையேயாம் எ-று . வ - று. கணனார்ந் துவப்பக் கடுங்கண்மறவர் பிணனார்ந்து பேய்வழங்கு ஞாட்பின் - நிணனார் விழுக்கினால் வேய்ந்த விறல்வேலோர் கல்லை ஒழுக்கினா ரொன்றொருவர் முன். (இ - ள்.) தமது திரள் நிறைந்து மனமகிழத் தறுகண்வீரர் பிணத்தைத் தின்று கழுதுலாம் பூசலிடத்துநிணம் நிறையும் நெஞ்சில் தசையால் மூடிய வென்றிவேலோர் செய்த செய்தொழில்தெரித்த கற்களை நிரைத்தார், ஒருவர்முன் ஒன்றாக எ-று . ஒருவரென்பது வினைதோறுங் கல் நடுவிக்கும்தலைவரை; ஒன்றொருவர் முன் ஒருவரொருவர் முன்னாகஎன்று கொள்ளின் , 2 "ஒன்றொருவரின் முன்னந்தழை விழைதக்கன கொய்தும் " என்றது போலும் . (11) 251. கன்னடுதல் அவன்பெயர்கன் மிசைப்பொறித்துக் கவின்பெறக் கன்னாட்டின்று . (இ - ள்.) வீரன் நாமத்தைக் கல்லிலே எழுதிஅழகுபெறக் கல்லை நட்டது எ-று . வ - று.1மாலை துயல மணியெறிந்துமட்டுகுத்துப் பீலி யணிந்து பெயர்பொறித்து - வேலமருள் ஆண்டக நின்ற வமர்வெய்யோற் காகென்று காண்டக நாட்டினார் கல்.
1. தொல். புறத். சூ. 5, இளம். மேற். 2. இறை. சூ. 2, உரை மேற். |