(இ - ள்.) மாலையசையத் தூமமணியைக் கறங்கப்பண்ணிமதுவைத் தெளித்துப் பீலியைச் சூட்டி அவன்பெயரைஎழுதி வேற்பூசலிடத்து ஆண்மைத்தன்மை மிகுதிபெறநின்ற போரை விரும்பினவனுக்கு இஃது உருவமாகவென்றுசொல்லிக் காட்சிபொருந்த நட்டார் கல்லினை எ-று . (12) 252. கன்முறை பழிச்சல் நிழலவி ரெழின்மணிப்பூட் கழல்வெய்யோன் கல்வாழ்த்தின்று. (இ - ள்.) நிழல்விடும் அழகிய மணிப்பூணினையும் வீரக்கழலையுமுடைய போர் விருப்பத்தோனுடைய கல்லினைஏத்தியது எ-று. வ - று.1அடும்புகழ் பாடி யழுதழுதுநோனா திடும்பையுள் 3வைகி யிருந்த - கடும்பொடு கைவண் குருசில் 2கற் கைதொழூஉச் செல்பாண தெய்வமாய் நின்றான் றிசைக்கு. (இ - ள்.) பகைவரைக்கொல்லும் கீர்த்தியைச்சொல்லிக் கலுழ்ந்து கலுழ்ந்து பொறாதே துன்பத்துள்ளேதங்கியிருந்த சுற்றத்தாரோடு கை வளப்பத்தினையுடையஉபகாரிதன் கல்லினைக்கைதொழுது போவாயாக ,பாணனே, கடவுளாய் நின்றான் திக்கு எட்டிற்கும் எ-று. (13) 253. இற்கொண்டு புகுதல் வேத்தமருள் விளிந்தோன்கல்லென ஏத்தினர் துவன்றி யிற்கொண்டு புக்கன்று. (இ - ள்.) வேந்தர் போரிடத்துப் பட்டவனுடைய கல்லென்று சொல்லி வழுத்தினராய்ச் செறிந்துகோயிலெடுத்துப் புக்கது எ-று . வ - று.4வாட்புகா வூட்டி வடிமணிநின்றியம்பக் கோட்புலி யன்ன குருசில்கல் - ஆட்கடிந்து விற்கொண்ட வென்றி விறன்மறவ ரெல்லோரும் இதற்கொண்டு புக்கா ரியைந்து. (இ - ள்.) வாளுக்கு உணவுகொடுத்துத் தெளிந்தமணி நின்று இரட்ட, கோட்பாட்டையுடைய புலியையொத்த உபகாரி கல்லை , போராளைத்துரந்து சிலையாற் பெற்றவெற்றியினையுடைய திறல்வீரர் பலரும் கோயிலெடுத்துப்புக்கார் கூடி எ-று . (14) (சிறப்பிற் பொதுவியற்பால்) (சூத்திரம் 11.) | முதுபா லையே சுரநடை யேனைத் தபுதார நிலையே தாபத நிலையே தலைப்பெய னிலையே பூசன் மயக்கே |
1. தொல். புறத். சூ. 5, இளம். மேற். 2. புறநா. 306 : 4; பட்டினப். 78-9 ,குறிப்புரை. (பி.ம்.)3. 'வைகிற்றிருந்த'. 4. 'வாட்பலியூட்டி' |