((இ - ள்.) மெய்ஞ்ஞானிகள் விரும்பியுறையும் விண்ணுலகத்தை ஐயப்பாடு ஒன்றுமின்றியேஉணர்ந்துசொல்லின், வெவ்விதான பகற்பொழுதுமில்லை; இரவுப் பொழுதுமில்லை; பாசமுமில்லை; உணவுமில்லை; மாறுபாடுமில்லை; தாழ்வுமில்லை எ-று. (4) 273. முதுகாஞ்சி தலைவரும் பொருளைத் தக்காங் குணர்த்தி நிலைநிலை யாமை நெறிப்பட வுரைத்தன்று. (இ - ள்.) மேலாய் வரும்பொருளைத் தக்கபடி அறிவித்து நிலைநில்லாமையை முறைப்படச் சொல்லியது எ-று. வ - று.1இளமை நிலைதளர 4மூப்போடிறைஞ்சி உளமை யுணரா தொடுங்கி - வளமை வியப்போவ லில்லா வியலிடத்து வெஃகா துயப்போக லெண்ணி னுறும். (இ - ள்.) இளமைப்பருவம் நிலையினின்று மெலிய முதுமையுடனே தாழ்ந்து உண்மையை யறியாதே யடங்கிச் செல்வத்தினது ஆச்சரியம் ஒழிதலில்லாத அகன்ற பூமியிடத்து ஒன்றும் விரும்பாது பிழைத்துப் போகையை விசாரிப்பின் உறுதியுடைத்து எ-று. (5) 274.காடு வாழ்த்து பல்லவர்க் கிரங்கும் பாடிமிழ் 2நெய்தல் கல்லென வொலிக்குங் காடுவாழ்த் தின்று. (இ - ள்.) பலர்க்கும் இசைக்கும் பெரிதாகஒலிக்கும் சாப்பறை அனுகரணசத்தமுடைத்தாகக் கறங்கும்சுடுகாட்டை வாழ்த்தியது எ-று. வ - று.3முன்புறந் தான்காணுமிவ்வுலகை யிவ்வுலகில் தன்புறங் கண்டறிவார் தாமில்லை - அன்பின் அழுதார்க ணீர்விடுத்த வாறாடிக் கூகை கழுதார்ந் திரவழங்குங் காடு. (இ - ள்.) முன்னே தான் முதுகு காணும், இவ்வுலகத்தினை; இவ்வுலகிடத்துத் தன் முதுகைக் கண்டு வென்றறிவார்தாம் ஒருவருமில்லை; காதலாலே அழுதவர் கண்ணீருகுத்த ஆற்றிலேபுக்கு ஆடிக் கோட்டானும் பேயும் நிறைந்து இராப்பொழுதின்கண் உலாவும் சுடுகாடு. எ - று. "குறியத னிறுதிச் சினைகெட வுகரம் , அறிய வருதல்செய்யுளுளுரித்தே" (தொல்.உயிர்மயங்கு.சூ.32)என்பதனால்உகரம் கெட்டது. (6) (முல்லைப் பொருவியற்பால்) (சூத்திரம் 13.) சீர்சான் முல்லையொடு கார்முல்லையென்றா தேர்முல் லையொடு நாண்முல்லை யென்றா
1. நன். சூ .451, மயிலை.மேற். 2. புறநா. 194:1; மணி.6. 71. 3. புறநா. 356. (பி.ம்.)4. 'மூப்புவந்தெய்தி' |