பக்கம் எண் :

வளம் வாழி.

பெயரோடடுத்துக் கூறியவழிப்புறப்புறமாம்; நெடுநல்வாடை போலப் பெயரோடு அடாது கூறியவழிப் பெருந்திணையாம்; இவை பிறர் மதமென்றலுமொன்று.

(10)

பொதுவியற் சூத்திரம்நான்கிற்குப் பாட்டு நாற்பத்தைந்தும் முடிந்தது.

பத்தாவது பொதுவியற்படலம்முற்றிற்று.


பதினொன்றாவது
கைக்கிளைப்படலம்
[ஆண்பாற் கூற்று]
(சூத்திரம் 14)

காட்சி யையந் துணிவே யுட்கோள்
பயந்தோர்ப் பழிச்ச னலம்பா ராட்டல்
நயப்புற் றிரங்கல் புணரா விரக்கம்
வெளிப்பட விரத்த லெனவிவ் வொன்பதும்
5ஆண்பாற் கூற்றுக் கைக்கிளை யாகும்.

என்-னின், ஆண்பாற் கூற்றுக் கைக்கிளையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். காட்சி முதலாக வெளிப்படவிரத்தல் ஈறாகச் சொல்லப்பட்ட ஒன்பதும் ஆண்பாற்கூற்றுக் கைக்கிளையாம் எ-று.

அவற்றுள்:-

285. காட்சி

சுரும்பிவர் பூம்பொழிற் சுடர்வேற்காளை
கருந்தடங் கண்ணியைக் கண்டுநயந் தன்று.

(இ - ள்.) வண்டு பரக்கும் பூவினையுடைய சோலையிடத்து ஒளிவேற்காளை, கறுத்த பெருத்த கண்ணினையுடையாளைக் கண்டு விரும்பியது எ-று.

(மருட்பா)

வ - று.1கருந்தடங்கண் வண்டாகச் செவ்வாய்தளிரா
அரும்பிவர் மென்முலை தொத்தாப் -பெரும்பணைத்தோட்
பெண்டகைப் பொலிந்த பூங்கொடி
கண்டேங் காண்டலுங் களித்தவெங் கண்ணே.

(இ - ள்.) கருமையும் பெருமையுமுடைய விழிசுரும்பாகச் சிவந்த வாய் தளிராக அரும்புபோன்றமெல்லிய முலை தொத்தாகப் பெரிய மூங்கில்போன்ற தோளாலும் பெண்மைத்தன்மையாலும் அழகுபெற்றதோர்மலர்வல்லியனையாளை நோக்கினேம்; நோக்கினேமாக, மகிழ்ந்தனஎமது விழிகள் எ-று.


1. தொல். களவு. சூ. 2. மேற். நாற்கவி. சூ. 199, உரை, மேற்.