பக்கம் எண் :

10. பொதுவியற்படலம்

(இ - ள்.) பொன்போல் இலங்கும் சுணங்கினையும்பொலிந்த கண்ணினையுமுடைய மடந்தை நன்மையறியும் கொழுநனுடைய நன்மையைப் பெருகச் சொல்லியது எ-று.

வ - று.1நெய்கொ ணிணந்தூ நிறையவமைத்திட்ட
குய்கொ ளடிசில் பிறர்நுகர்க-வைகலும்
அங்குழைக் கீரை யடகு மிசையினும்
எங்கணவ னல்க லினிது.

(இ - ள்.) நெய்யைத் தன்னிடத்துக் கொண்டநிணமும் தசையும் மிகக்கூட்டி ஆக்கின பொரிக்கறியுடைத்தானசோற்றைப் பிறர் அருந்துக, நாடோறும்; அழகியதளிரையுடைய கீரையாகிய இலைக்கறியை நுகரினும் எமதுகொழுநன்அருளுமது, இனிதாயிருக்கும் எமக்கு எ-று.

குய்-நறையென்றுமாம்.

(8)

283. இதுவுமது

மேவருங் கணவன் றணப்பத் தன்வயின்
காவல் கூறினு மத்துறை யாகும்.

(இ - ள்.) பொருந்துதல்வந்த கொழுநன்நீங்கத் தன்னிடத்துக் காவலைச் சொல்லினும் முற்பட்டதுறையேயாம் எ-று.

வ - று. மௌவல் விரியு மணங்கமழ்மான்மாலைத்
2தௌவன் முதுகுரம்பைத் தான்றமியள்-செவ்வன்
இறைகாக்கு மிவ்வுலகி னிற்பிறந்த நல்லாள்
நிறைகாப்ப வைகு நிறை.

(இ - ள்.) மௌவல் மலரும் மணநாறும்மயக்கத்தினையுடைய மாலைக் காலத்து அழிந்த பழங்கூரையிடத்துத் தான் தனியொருத்தி ,செவ்விதாகஇறைவன் காவல் போற்றும் இந்நிலத்திடத்துக்குடிப்பிறந்த நல்லவளுடைய காப்பன காத்துக் கடிவனகடிந்தொழுகும் ஒழுக்கமாகிய நிறை, பரிகரிப்பத் தங்கும்நிறையானது எ-று.

(9)

284. இதுவுமது

திருவளர் நன்னக ரடைந்த கொழுநன்
பெருவள மேத்தினு மத்துறை யாகும்.

(இ - ள்.) செல்வம் பெருகும் அழகியமாளிகையிலே சேர்ந்தகணவன்றன் பெரிய செல்வத்தை வாழ்த்தினும் முற்பட்ட துறையேயாம் எ-று.

வ - று. ஊழிதோ றூழி தொழப்பட்டுலைவின்றி
ஆழிசூழ் வையத் தகமலிய-வாழி
கருவரை மார்பினெங் காதல னல்க
வருவிருந் தோம்பும் வளம்.

(இ - ள்.) நெடுங்காலந்தோறும் நெடுங்காலந்தோறும் வணங்கப்பட்டுக் கேடின்றிக் கடல் சூழ்ந்த பாரகம் பெருக வாழ்வதாக! வலிய மலைபோன்றஅகலத்தினையுடைய எம் கணவன் அருள யான் வருகிறவிருந்தைப் போற்றுஞ் செல்வம் எ-று.


1. மதுரைக். 755-8. (பி-ம்.)2. 'தையன்'