(இ - ள்.) அனுகரண சத்தத்தான் மிக்ககடலை வேலியாகவுடைய ஞாலத்திடத்துக் கொழுநன் பாதத்தையேத்திச் செயற்படும் வகையால் விருந்தினரைப் பாதுகாத்துநடக்கும் தம்முடைய இல்லிடத்துச் செல்வமல்லது வேண்டினோர்க்குக்கொடுக்கமாட்டாப் புல்லிய சம்பத்து, இசை பூக்கமாட்டா எ-று. (5) 280. பகட்டு முல்லை வயன்மிகு சிறப்பின் வருத்தமுநோன்மையும் வியன்மனைக் கிழவனைப் பகட்டொடு பொரீஇயன்று. (இ - ள்.) பழனத்தின் மிக்க நன்மையாகியமுயற்சியான் வந்த இளைப்பாலும் பாரம்பொறுத்தலாலும் அகன்றமனைக்கு உரிமையாளனைஏருடன் உவமித்தது எ-று. வ - று. உய்த்தல் பொறுத்த லொழிவின்றொலிவயலுள் எய்த்த லறியா 1திடையின்றி-வைத்த படுநுகம் பூண்ட பகட்டொடு மானும் நெடுமொழி யெங்கணவ னேர். (இ - ள்.) செலுத்தல் பாரம்பொறுத்தல் நீங்குதலின்றி நீரொலிக்கும் விளைபுலத்திடத்துஇளைத்தலறியாது இடையீடின்றிக் கழுத்தின் மேல்வைத்த மிக்க நுகத்தைப் பூண்ட ஏரொடு நேரொக்கும்உயர்ந்த புகழினையுடைய எம் கொழுநன் எ-று. (6) 281. பான்முல்லை அரிபா யுண்க ணாயிழைப்புணர்ந்தோன் பரிவக லுள்ளமொடு பால்வாழ்த் தின்று. (இ - ள்.) செவ்வரி கருவரி பரந்தமையுண்ட விழியினையும் தெரிந்த ஆபரணத்தினையும்உடையானை மணந்தவன் வருத்தம் நீங்கின மனத்துடனேவிதியை ஏத்தியது எ-று. வ - று. திங்கள் விளங்குந் திகழ்ந்திலங்குபேரொளி 2அங்கண் விசும்பி னகத்துறைக-செங்கட் குயிலனைய தேமொழிக் கூரெயிற்றுச் செவ்வாய்ப் பயில்வளையை நல்கிய பால். (இ - ள்.) மதியிலங்கும், மிக்குவிளங்கும் பெரியசோதியினையுடைய அழகிய இடத்தினையுடையசுவர்க்கத்திலே உறைவதாக; சிவந்த கண்ணினையுடையகுயிலின் இசைபோன்ற இனிய சொல்லினையும் கூரியஎயிற்றினையும் செய்ய வாயினையும் செறிந்த தொடியினையுமுடையாளை எனக்குத் தந்த விதி எ-று. (7) 282. கற்பு முல்லை 3பொன்றிகழ் சுணங்கிற் பூங்க ணரிவை நன்றறி கொழுநனை நலமிகுத் தன்று.
1. மணி. 14 : 27. 2. மதுரைக். 384; நாலடி .151, 373. 3. முருகு. 145. |