பக்கம் எண் :

அஞ்சொன் மாரிபெய் தவியாள்
நெஞ்சம் பொத்தி நிறைசுடு நெருப்பே.

(இ - ள்.) ஆரவாரம் மிக மறைந்து என்நெஞ்சிலேயிருந்தும், சிவந்த வாயினையும் பெரியதோளினையும் அழகிய நுதலினையும் உடையவள்அழகிய வாயிடத்து அழகிய வார்த்தையாகிய மழையைச் சொரிந்து ஆற்றாள்; என்மனத்திலேகலந்து என்னுடைய நிறையுடைமையைச் சுடா நின்றது காமத் தீ எ-று.

காமத்தீயை அஞ்சொல்மாரி பெய்துஅவியாளென்க. உட்கோளாவது உறலாமென்பதனை உட்கொள்கை.

(4)

289. பயந்தோர்ப் பழிச்சல்

இவட்பயந் தெடுத்தோர் வாழியர்நெடிதென
அவட்பயந் தோரை யானாது புகழ்ந்தன்று.

(இ - ள்.) இவளைப் பெற்றெடுத்தோர் பெரிதும் வாழ்வாராக வெனச் சொல்லி அவளைப் பெற்றோரைஅமையாது புகழ்ந்தது எ-று.

வ - று. கல்லருவி யாடிக் 1கருங்களிறுகாரதிரும்
மல்லலஞ் சாரன் மயிலன்ன - சில்வளைப்
பலவொலி கூந்தலைப் பயந்தோர்
நிலவரை மலிய நீடுவா ழியரே.

(இ - ள்.) மலையருவி யாடி வலிய யானை மேகம்போல முழங்கும் வளப்பத்தினையுடைய அழகிய மலைப்பக்கத்து மயிற்பேடையையொத்த சில தொடியினையும் பலபகுதியாய்த்தழைந்த மயிரினையுமுடையாளைப் பெற்றோர், பூமியெல்லையிலேமிக நெடுங்காலம் வாழ்வாராக எ-று.

(5)

290. நலம் பாராட்டல்

அழிபட ரெவ்வங் கூர வாயிழை
பழிதீர் நன்னலம் பாராட் டின்று.

(இ - ள்.) மிக்குநடக்கும் விதனஞ் சிறக்க, தெரிந்த ஆபரணத்தினை யுடையாந்ள்தன் குற்றந் தீர்ந்தஅழகிய நலத்தைக் கொண்டாடியது எ-று.

வ - று. அம்மென் கிளவி கிளிபயிலவாயிழை
கொம்மை வரிமுலை கோங்கரும்ப - இம்மலை
நறும்பூஞ் சார லாங்கண்
குறுஞ்சுனை 2மலர்ந்தன தடம்பெருங் கண்ணே.

(இ - ள்.) அழகிய மெல்லிதான வார்த்தையைக்கிளி பழகத் தெரிந்த ஆபரணத்தினையுடையாள்தன் குவிந்து அழகியவான கொங்கையைக் கோங்கு முகிழ்ப்ப இந்த வரையிடத்து நாறுமலரினையுடைய மலைப்பக்கத்துச் சிறுசுனைக் குவளைகள் பூத்தன, மிகப் பெரிய விழியினை எ-று.

நற்காமத்து நலம்பாராட்டல்புணர்ச்சி தோன்ற வரும்; இஃது அன்னதன்று.

(6)


1. பு. வெ. 37 : 4 2. பு. வெ. 205 : 2; முருகு . 75.