பக்கம் எண் :

(இ - ள்.) வலிய ஆரவாரத்தினையுடைய 1கடல்கடந்தேறிப் பரந்தாலொத்த ஒளித்தற்கரிய ஆசை அழற்ற இரத்தலெதிர முட்போன்ற பல்லு விளங்கும்மூரன் முறுவலையும் வெள்வளையினையும் உடையாள் அருளாள், விடும் என்னுடைய உயிர் எ-று.

(9)

ஆண்பாற்கூற்றுக் கைக்கிளை முற்றிற்று.


[பெண்பாற் கூற்று]
(சூத்திரம் 15)

காண்ட னயத்த லுட்கோண் மெலிதல்
மெலிவொடு வைகல் காண்டல் வலித்தல்
பகன்முனி வுரைத்த லிரவுநீடு பருவரல்
கனவி னரற்ற னெஞ்சொடு மெலிதல்
பெண்பாற் கூற்றுக் கைக்கிளை யாகும்.

என்-னின், பெண்பாற்கூற்றுக் கைக்கிளையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) காண்டல் முதலாக நெஞ்சொடு மெலிதல்ஈறாகச் சொல்லப்பட்ட பத்தும் பெண்பாற்கூற்றுக்கைக்கிளையாம் எ-று.

அவற்றுள் :-

294. காண்டல்

தேம்பாய் தெரியல் விடலையைத்திருநுதற்
காம்பேர் தோளி கண்டுசோர்ந் தன்று.

(இ - ள்.) மதுப்பொழியும் மாலையினையுடைய தலைவனை அழகிய நுதலினையும் மூங்கில் போன்றதோளினையும் உடையாள் நோக்கி மெலிந்தது எ-று.

வ - று. கடைநின்று காம நலியக் கலங்கி
இடைநின்ற வூரலர் தூற்றப் - புடைநின்ற
2எற்கண் டிலனந் நெடுந்தகை
தற்கண் டனென்யான் கண்ட வாறே.

(இ - ள்.) என்னிடத்திலே ஆசையானது நின்று நெருக்க மயங்கி நடுவுநின்ற ஊர் அலரெடுப்பப் பக்கத்திலேநின்ற என்னைக் கண்டிலன், அந்தப் பெரிய மேம்பாட்டினையுடையவன்; தன்னைக் கண்டேன் யான்; கண்டபடியே ! எ-று.

(1)

295. நயத்தல்

கன்னவி றிணிதோட் காளையைக் கண்ட
நன்னுத லரிவை நயப்புரைத் தன்று.

(இ - ள்.) உலக்கல் பழகிய திண்ணிய தோளையுடையதலைவனைக் கண்ட நல்ல நுதலினையுடைய மடந்தையினது ஆசைப்பாட்டைச் சொல்லியது எ-று


1. கடலன்ன காமம் : குறள். 1137. 2. பு. வெ.307 : 3-4.