வம்ப வுரையொடு மயங்கிய அம்பற் பெண்டிரு மறைகவெம் மலரே. (இ - ள்.) அழகிய தொடி கழல என் அழகழிவு காட்டுவான் வேண்டிப் போதல் உடன்பட்டேன், அத்தலைவன் முன்பு; இல்லாத புதுவார்த்தையொடு கலங்கிய புறங்கூறும் பெண்டிரும் சொல்லுக, எம்முடைய அலரை எ-று. யான் செல்ல வலித்தேனெனச் சொல்லிற்பெருந்திணையாம். (12) ஆண்பாற் கூற்றுப் பெண்பாற் கூற்றுக்கைக்கிளைப் பாட்டு இருபத்தொன்றும் முடிந்தன. பதினொன்றாவது கைக்கிளைப்படலம் முற்றிற்று.
பன்னிரண்டாவது பெருந்திணைப்படலம் (பெண்பாற்கூற்று) (சூத்திரம் 16.) | வேட்கைமுந் துறுத்தல் பின்னிலை முயறல் பிரிவிடை யாற்றல் வரவெதிர்ந் திருத்தல் வாராமைக் கழித லிரவுத்தலைச் சேறல் இல்லவை நகுதல் புலவியுட் புலம்பல் | 5 | பொழுதுகண் டிரங்கல் பரத்தையை யேசல் கண்டுகண் சிவத்தல் காதலிற் களித்தல் கொண்டகம் புகுதல் கூட்டத்துக் குழைதல் ஊடலு ணெகிழ்த லுரைகேட்டு நயத்தல் பாடகச் சீறடி பணிந்தபி னிரங்கல் | 10 | பள்ளிமிசைத் தொடர்தல் செல்கென விடுத்தலென ஒன்பதிற் றிரட்டியோ டொன்று முளப்படப் பெண்பாற் கூற்றுப் பெருந்திணைப் பால. |
என் - னின், பெருந்திணைக்குரிய பெண்பாற்கிளவி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) வேட்கை முந்துறுத்தல் முதலாகச் செல்கென விடுத்தல் ஈறாகச் சொல்லப்பட்ட பத்தொன்பதும் பெருந்திணைக்குரிய பெண்பாற் கிளவியாம் எ-று. அவற்றுள் :- 306. வேட்கை முந்துறுத்தல் கையொளிர் வேலவன் கடவக் காமம் மொய்வளைத் தோளி முந்துற மொழிந்தன்று. |