303. இதுவுமது பெய்வளை யவனொடு பேணிய கங்குல் உய்குவென் வரினென வுரைப்பினு மதுவே. இ - ள். இட்ட வளையினையுடையாள் தலைவனோடு விரும்பிய இரவுப் பொழுது வரின் பிழைப்பேனெனச் சொல்லினும் அத்துறையாகும் எ-று. வ - று. தோடவிழ்தார் யானுந் தொடர வவனுமென் பாடகச் சீறடியின் மேற்பணிய - நாடகமா வைகிய கங்கு றலைவரின் உய்குவெ னுலகத் தளியேன் யானே. (இ - ள்.) இதழ்விரிந்த மாலை செவ்வியழிந்தமை யானும் வினவத்தலைவனும் என்னுடைய பாடகத்தினையுடைய சிற்றடிமேலே வணங்கக் கூத்தாகத் தங்கிய இரவுப்பொழுது இன்னம் கைகூடிற் பிழைப்பேன்; பூமியிடத்து அளியேன்யான் எ-று. (10) 304. நெஞ்சொடு மெலிதல் அஞ்சொல் வஞ்சி யல்லிருட் செலீஇய நெஞ்சொடு புகன்ற நிலையுரைத் தன்று. (இ - ள்.) அழகிய சொல்லினையுடைய வஞ்சிக்கொம்பை ஒப்பாள் இரவுப்பொழுது இருளின்கட் செல்வான்வேண்டி மனத்தோடு விரும்பிய நிலையைச் சொல்லியது எ-று. (வ - று.) மல்லாடு தோளா னளியவாய் மாலிருட்கண் செல்லா மொழிக செலவென்பாய் - நில்லாய் புனையிழை யிழந்த பூசல் நினையினு நினைதியோ வாழியென் னெஞ்சே. (இ - ள்.) 'மல்லின் செய்தி யுலாவும்புயத்தினையுடையான்றன் அளியை ஆசைப்பட்டு மயக்கமுடைய இருளிடத்துச் செல்லக்கடவே மல்லேம்; நீ தவிர்வாயாகபோக்கை ' என்று சொல்லுவாய்; நீ நில்லாய்; அணிந்த ஆபரணம் சோர்ந்த ஆரவாரத்தை உள்ளுவையோ? உள்ளாயோ? வாழ்வாயாக, எனது நெஞ்சே எ-று. (11) 305. இதுவுமது வரிவளை நெகிழ்த்தோன் முன்செல வலித்தேன் அரிவைய ரறிகென வுரைப்பினு மதுவே. (இ - ள்.) அழகிய வளையை நெகிழப் பண்ணினோன் முன்னேபோவேனாகத் துணிந்தேன்; அரிவையரெல்லாம் இதனை அறிகவெனச் சொல்லினும் முன்பு சொன்ன துறையேயாம் எ-று. வ - று. நல்வளை யேக நலந்தொலைவு காட்டிய செல்லல் வலித்தேனச் செம்மன்முன் - பில்லாத |