பக்கம் எண் :

341. குற்றிசை

பொற்றா ரகலம் புல்லிய மகளிர்க்
கற்றாங் கொழுகா தறங்கண்மா றின்று .

(இ - ள்.) அழகிய மாலை மார்பைப் பொருந்திய அரிவையர்க்கு அற்றறுதிப்பட்டு நடவாது அறத்தைக் கண்மறுத்தது எ-று.

வ - று.1கரிய பெருந்தடங்கண் வெள்வளைக்கையாளை
மரிய கழிகேண்மை மைந்த - தெரியின்
விளிந்தாங் கொழியினும் விட்டகலார் தம்மைத்
தெளிந்தாரிற் றீர்வது தீது.

(இ - ள்.) கரியவாய் மிகவும் பெரிய விழியினையும் விளர்த்த தொடியணிந்த கரத்தினையுமுடையாளைப் பொருந்திய மிக்க தொடர்ச்சியினையுடைய தலைவனே, ஆராயின், இறந்துபடினும் விட்டு நீங்காராய்த் தம்மைத் துணையென்று தேறினாரிடத்து நின்றும் கழிவது பொல்லாது எ-று.

342. குறுங்கலி

நாறிருங் கூந்தன் மகளிரை நயப்ப
வேறுபடு வேட்கை வீயக் கூறின்று.

(இ - ள்.) நறுநாற்றங் கமழும் பெரிய குழலினையுடைய மடவாரை விரும்ப விகற்பித்த காதலைக் கெடச்சொல்லியது எ-று.

வ - று. பண்ணவாந் தீஞ்சொற் பவளத்துவர்ச்செவ்வாய்
பெண்ணவாம் பேரல்குற் பெய்வளை - கண்ணவாம்
நன்னலம் பீர்பூப்ப நல்கார் விடுவதோ
தொன்னல முண்டார் தொடர்பு.

(இ - ள்.) பண் ஆசைப்பட்ட தித்தித்த சொல்லினையும் பவளம்போல மிகச் சிவந்த வாயினையும் பெண்மைத்தன்மை அவாவும் பெரிய அல்குலினையும் இட்ட வளையினையுமுடையவள் தன் கண்களாசைப்படும் நல்ல அழகு பீர்க்கம்பூப்போலப் பசப்ப அருளாராய்க் கைவிடுவதோ, பழையதாகிய நலத்தை அனுபவித்தவர் உறவு எ-று.

(17)

இருபாற்பெருந்திணை முற்றிற்று.

பெருந்திணைப் பாட்டு முப்பத்தேழும் முடிந்தன .

பன்னிரண்டாவது பெருந்திணைப் படலம் முற்றிற்று .


2ஒழிபு
(சூத்திரம் 18.)

பாடாண் பகுதியுட் 3டொல்காப் பியமுதற்
கோடா மரபிற் குணனோடு நிலைஇக்

1. தொல். அகத். சூ. 54, இளம் . மேற். (பி.ம்.)2. 'பாடாண்பாட்டிலும் வாகையிலுமுள்ள புறத்தியல்' , 'வென்றிப்பெருந்திணை'. 3. 'தொல்காப்பியன் முதற்'