பக்கம் எண் :

(இ - ள்.) திரண்ட பிணக்குச் சுற்றின காவற்காடும் நெருப்புப் போன்ற பூவினையுடைய காணத்தக்க நீண்ட அகழும் காவல் புரிவாராய் வேண்டுகிலர்; சிங்கமொத்த சினவேலோர் தத்தமுடைய மெய்யுடன் உயிரைக் காத்தலை எ - று.

காத்தலை வேண்டாரென்க.

(4)

90. குதிரைமறம்

ஏமாண்ட நெடும்புரிசை
வாமானது 1வகையுரைத்தன்று.

(இ - ள்.) எய்யுந் தொழில் மாட்சிமைப்பட்ட பெரிய மதிலிடத்துப்பாயும் குதிரையது பகுதியைச்சொல்லியது எ - று.

(5)

வ - று.1தாங்கன்மின் றாங்கன்மின் றானை விறன்மறவிர்
ஓங்கன் மதிலு ளொருதனிமா-ஞாங்கர்
மயிரணியப் பொங்கி மழைபோன்று மாற்றார்
உயிருணிய வோடி வரும்.

(இ - ள்.) தடுத்தற்கரிது! தடுத்தற்கரிது!! தடாதேகொண்மின்! தடாதேகொண்மின்!! சேனையிடத்து வென்றிவீரர்காள் ,மலைபோன்ற புரிசையிடத்து ஒப்பில்லாததொரு குதிரை பக்கத்தே கவரியிட எழுந்து மேகத்தையொத்துப் பகைவருயிரை உண்பான்வேண்டிக் கடுகிவரும் எ - று.

(5)

91. எயிற்போர்

அயிற்படையி னரண்காக்கும்
எயிற்படைஞ ரிகன்மிகுத்தன்று.

(இ - ள்.) கூரிய ஆயுதத்தாலே குறும்பினைக் காக்கும் மதிலிடத்துப் போர்வீரர் மாறுபாட்டைச் சிறப்பித்தது எ - று.

வ - று. மிகத்தாய செங்குருதி மேவரு மார்பின்
உகத்தா முயங்கியக் கண்ணும் -அகத்தார்
புறத்திடைப் போதந் தடல்புரிந்தார் பொங்கி
மறத்திடை மானமேற் கொண்டு.

(இ - ள்.) பெருகப்பரந்த சிவந்தசோரி பொருந்தின அகலத்தினின்றும் வீழத் தாம் வருந்தியவிடத்தும் உள்ளுள்ளார் அரணிற்குப் புறம்பே போந்து கோறலை விரும்பினார்,கோபித்துச் சினத்தின்நடுவே அபிமானத்தைமேற்கொண்டு எ - று.

(6)

92. எயிறனையழித்தல்

துணிவுடைய தொடுகழலான்
அணிபுரிசை யழிவுரைத்தன்று.


1. புறநா. 299, 303-4. 2.மதுரைக். 391. (பி-ம்.) 2 .'நிலையுரைத்தன்று'