பக்கம் எண் :

5. நொச்சிப்படலம்

(இ - ள்.) தெளிவுடைத்தான கட்டுங்கழலோன் அழகிய மதிலின்கட் கேட்டினைச் சொல்லியது எ - று.

வ - று.1அகத்தன வார்கழ னோன்றா ளரணின்
புறத்தன போரெழிற் றிண்டோள்-உறத்தழீஇத்
தோட்குரிமை பெற்ற துணைவளையார் பாராட்ட
வாட்குரிசில் வானுலகி னான்.

(இ - ள்.) அரணினுள்ளே வீழ்ந்தன, கட்டுங் கழலாற் பொலிந்த வலிய கால்; மதிலின் புறம்பே வீழ்ந்தன, பூசலைச்செய்யும் அழகிய திண்ணியதோள்; இறுகவணைத்துத் தோட்கு உரியரான இணைவளையினையுடைய தெய்வமகளிர் கொண்டாட வாளினையுடைய உபகாரி விண்ணிடத்தான் எ - று.

(7)

93. அழிபடை தாங்கல்

இழிபுடன் றிகல்பெருக
அழிபடை யரண்காத்தன்று.

(இ - ள்.) தம் படைத்தாழ்விற்குக் கோபித்து மாறுபாடு மிகக் கெட்ட சேனை எயிலைக் காத்தது எ - று.

வ - று. பரிசை பலகடந்து பற்றா ரெதிர்ந்தார்
எரிசெ யிகலரணங் கொண்மார்- புரிசை
அகத்தடி யுய்யாமை யஞ்சுடர்வா ளோச்சி
மிகத்தடிந்தார் மேனின் றவர்.

(இ - ள்.) கிடுகுபடை பலவற்றையும் வென்று பகையான உழிஞையார் எதிர்ந்தாராக அழலினைப்பண்ணும் மாறுபாட்டுக்குறும்பினைக் கொள்வான் மதிலினுட் காலிடாதபடி அழகிய ஒளியையுடைய வாளைஓச்சிப் பிணம்பெருகத் துணிந்தார், மதின்மேல் நின்ற வீரர் எ - று.

(8)

94. மகண்மறுத்து மொழிதல்

வெம்முரணான் மகள்வேண்ட
அம்மதிலோன் மறுத்துரைத்தன்று.

(இ - ள்.) வெய்தான பகையையுடையவன் மகளை வேண்ட அழகிய குறும்பினுள்ளோன் மறுத்துச் சொல்லியது எ - று.

வ - று. ஒள்வாண் மறவ ருருத்தெழுந் தும்பர்நாட்
கள்வார் நறுங்கோதை காரணமாக்-கொள்வான்
மருங்கெண்ணி வந்தார் மழகளிற்றின் கோடிக்
கருங்கண்ணி வெண்கட்டிற் கால்.

(இ - ள்.) நொச்சியில் ஒள்ளிய வாள் 2வீரரைக் கோபித்தெழுந்துமேனாள் தேனொழுகும் நறுமாலையையுடையவள் பொருட்டாகக்கொண்டு


1. தொல். புறத். சூ. 11, இளம். மேற். (பி-ம்.) 2. 'வீரர்'