கொள்வான் வேண்டி இடையின் அழகைக் கருதி வந்தவருடைய இளைய வாரணத்தின் கொம்பு, இந்தக் கறுத்த கண்ணினையுடையாள் வெளுத்தகட்டிலின் கால் எ - று. "ஆயிரு திணையு மரசர்க் குரிய" என்பதனால்மகட்பாற்காஞ்சி அரசர்க்குரித்து; இது மறவர்க்குரித்து. (9) நொச்சித்திணைப்பாட்டு ஒன்றும் துறைப்பாட்டு எட்டும் முடிந்தன. ஐந்தாவது நொச்சிப்படலம் முற்றிற்று.
ஆறாவது உழிஞைப் படலம் (சூத்திரம் 6.) | உழிஞை யோங்கிய குடைநாட் கோளே வாணாட் கோளே முரச வுழிஞை கொற்ற வுழிஞையோ டரச வுழிஞை கந்தழி யென்றா முற்றுழி ஞையே | 5 | காந்தள் புறத்திறை யாரெயி லுழிஞை அருந்தோ லுழிஞை குற்றுழி ஞையொடு கோட்புறத் துழிஞை பாசி நிலையே ஏணி நிலையே யிலங்கெயிற் பாசி முதுவுழி ஞையே முந்தகத் துழிஞை | 10 | முற்று முதிர்வே யானைகைக் கோளே வேற்றுப்படை வரவே யுழுதுவித் திடுதல் வாண்மண்ணு நிலையே 1மண்ணுமங் கலமே மகட்பா லிகலே திறைக்கொண்டு 2பெயர்தல் அடிப்பட விருத்த றொகைநிலை யுளப்பட | 15 | இழுமென் சீர்த்தி யிருபத் தொன்பதும் உழிஞை யென்மனா ருணர்ந்திசி னோரே. |
என்-னின், உழிஞைத் திணையும் துறையுமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) உழிஞை, குடைநாட்கோள் ,வாணாட்கோள், முரசவுழிஞை, கொற்றவுழிஞை, அரசவுழிஞை, கந்தழி, முற்றுழிஞை, காந்தள், புறத்திறை, ஆரெயிலுழிஞை, தோலுழிஞை, குற்றுழிஞை, புறத்துழிஞை, பாசிநிலை, ஏணிநிலை, எயிற்பாசி, முதுவுழிஞை, அகத்துழிஞை, முற்றுமுதிர்வு, யானைகைக்கோள், வேற்றுப்படைவரவு, உழுதுவித்திடுதல், வாண்மண்ணுநிலை, மண்ணுமங்கலம், மகட்பாலிகல், திறைகொண்டு பெயர்தல், அடிப்படவிருத்தல், தொகைநிலை எனச்சொல்லப்பட்ட இவ்விருபத்தொன்பதும் உழிஞைத்திணையும் துறையுமாம் எ - று.
(பி.ம்.)1. 'மணமங்கலமே'. 2 'பெய்தல்' |