8. வாகைப்படலம் ஐந்தொழி னான்மறை முத்தீ யிருபிறப்பு வெந்திறற் றண்ணளியெம் வேந்து. (இ - ள்.) காவற்றொழிற்குச் சமைந்தான் ;கடல்சூழ்ந்த பூமியினை இவன் காத்தலாலே ஒழிதலறியாது பல்லுயிர்க்கும் மகிழ்ச்சி; பொருந்துதல் வரும்நன்மையினையுடைய ஐந்து தொழிலினையும் நான்கு வேதத்தினையும்மூன்று தீயினையும் 3பூணூலிடுவதற்கு முன்னும்பின்னுமாகிய இருபிறப்பினையும் 4பகையிடத்து வெவ்விய வினையினையும் குளிர்ந்த அருளினையு முடைய எம்முடைய வேந்தன் எ-று. ஐந்துதொழில் - ஓதல், வேட்டல்,ஈதல், படைக்கலம் பயிறல், பல்லுயிரோம்பல். (3) 158. முரச வாகை ஒலிகழலா னகனகருட் பலிபெறுமுரசின் பண்புரைத்தன்று. (இ - ள்.) ஆரவாரிக்கும் வீரக்கழலினை யுடையானதுபரந்த மாளிகையிடத்துப் பலியைப்பெறும் முரசினுடைய தன்மையைச் சொல்லியது எ-று. (வ - று.) மதியேர் நெடுங்குடை மன்னர் பணிந்து 1புதிய புகழ்மாலை வேய - நிதியம் வழங்குந் தடக்கையான் வான்றோய் நகருள் முழங்கு மதிரு முரசு. (இ - ள்.) நிறைந்த மதியையொக்கும் உயர்ந்தகொற்றக்குடையினையுடைய அரசர் தாழ்ந்து புதிதானகீர்த்தித் தெரியலைச் சூட்டப் பொருளைப் பலர்க்குங்கொடுக்கும் பெரிய 5கையினையுடைய அரசனது விண்ணைக்கிட்டஉயர்ந்த மாளிகையிடத்து இப்பொழுது ஆர்ப்பரவம்பண்ணா நின்றது, முன்பு பகையுள்ள காலத்து இடிக்கும் முரசு எ-று. (4) 159. மறக்களவழி முழவுறழ் திணிதோளானை உழவனாக வுரைமலிந்தன்று. (இ - ள்.) முழவுபோலத் திரண்ட திண்ணியபுயத்தினையுடையானை உழும் வேளாளனாக மிகுத்துச் சொல்லியதுஎ-று. (வ - று.)2அஞ்சுவரு தானை யமரென்னுநீள்வயலுள் வெஞ்சினம் வித்திப் புகழ்விளைக்கும் - செஞ்சுடர்வேற் பைங்கட் பணைத்தாட் பகட்டுழவ னல்கலான் எங்கட் கடையா விடர். (இ - ள்.) கண்டார் வெருவும் சேனையாகிய வரம்பையுடைய போர்க்களமென்னும் நீண்ட செறுவினுள் வெய்ய செற்றமென்னும் வித்தை
1. ' மூவாவிழுப்புகழ் ' (பு-வெ. 222). 2. இந்தவெண்பா ஏகதேச உருவகத்திற்கு மேற்கோள்; மாறன்.ப.178. 3. 'பூணநூல் ' 4.' பகைவரிடத்து ' 5.' கையினையுடையது' |