பக்கம் எண் :

விதைத்துக் கீர்த்தியைவிளைக்கும் சிவந்த ஒளிவேலாகிய கோலினையுடைய பச்சென்ற கண்ணினாலும் பெருத்த தாளினாலும் சிறந்தயானையாகிய ஏருழவன் அளித்தலால் எம்போல்வார்க்குவறுமையடையா எ-று.

இது 3மாட்டேறில்லாஉருவகம். பைங்கண்:பண்பு.

(5)

160. களவேள்வி

அடுதிற லணங்கார
விடுதிறலான் களம்வேட்டன்று.

(இ - ள்.) கொல்லும் வலியினையுடைய பேய் வயிறார உண்ணப் பரந்த வலியினையுடையான் களவேள்விவேட்டது எ-று.

(வ - று.) பிடித்தாடி யன்ன பிறழ் பற்பே யாரக்
கொடித்தானை மன்னன் கொடுத்தான்-1முடித்தலைத்
தோளொடு வீழ்ந்த 2தொடிக்கை துடுப்பாக
மூளையஞ் சோற்றை முகந்து.

(இ - ள்.) பலுவையொத்த பிறழ்ந்த எயிற்றினையுடையபேயுண்ணக் கொடியினையுடைய சேனைமன்னவன் வழங்கினான்; மகுடத்தலையாகியமிடாவில் தோளுடனே வெட்டுண்டு வீழ்ந்த தோள்வளையாற்சிறந்த கையே துடுப்பாக மூளையாகிய அழகிய சோற்றைமுகந்து எ-று.

(6)

161. முன்றேர்க் குரவை

வென்றேந்திய விறற்படையோன்
முன்றேர்க்க ணணங்காடின்று.

(இ - ள்.) வென்றெடுத்த வெற்றியான்மிக்க ஆயுதத்தையுடையான் தேரின்முன்பு எ-று. முன் பேயாடும்.

(வ - று.) உலவா வளஞ்செய்தா னூழிவாழ் கென்று
புலவாய புன்றலைப்பே யாடும்-கலவா
அரசதிர நூறி யடுகளம் வேட்டான்
முரசதிர வென்றதேர் முன்.

(இ - ள்.) கெடாத நன்மையினைச் செய்தவன்நெடுங்காலம் வாழ்வானாகவெனச் சொல்லிப்புலால்நாறும் வாயினையும் புற்கென்ற தலையினையுமுடையபேய் கூத்தாடும்; பொருந்தாத மன்னர் நடுங்கவெட்டிக்களவேள்வி வேட்டான் முரசுமுழங்க வென்ற தேரின்முன்பு எ-று. முன் பேயாடும்.

(7)

162. பின்றேர்க் குரவை

பெய்கழலான் றேரின்பின்
மொய்வளைவிறலியர் வயவரொடாடின்று.


1. சிலப். 26. 242-3. புறநா. 26 : 10; மதுரைக். 34-5. (பி-ம்.) 2. 'மாட்டேற்றில்லா', 'மாட்டேறேலா'