8. வாகைப்படலம் (இ - ள்.) இட்ட வீரக்கழலினையுடையான் தேரின்பின் செறிந்த தொடியினையுடைய பாணிச்சியர்வீரரோடு கூத்தாடியது எ-று. (வ - று.)1வஞ்சமில் கோலானைவாழ்த்தி வயவரும் அஞ்சொல் விறலியரு மாடுபவே-2வெஞ்சமரில் குன்றேர் மழகளிறுங் கூந்தற் பிடியும்போற் பின்றேர்க் குரவை பிணைந்து. (இ - ள்.) பொய்யாத செங்கோலினையுடைய அரசனைத் துதித்து வெற்றியினையுடைய வீரரும் அழகிய மொழியினையுடைய பாணிச்சியரும் கூத்தாடாநின்றார் வெவ்விய பூசலிடத்து; மலையையொக்கும்இளைய யானையினையும் கூந்தற்பிடியினையும் ஒப்பத் தேரின் பின்கைகோத்தாடும் கோப்பைக் கொண்டு எ-று. தும்பையின் முன்றேர்க்குரவை பின்றேர்க்குரவை 3போர்க்குச் செல்லும் தேரின்மேல்; இவை வென்றுநின்ற தேரின்மேல். (8) 163. பார்ப்பனவாகை கேள்வியாற் சிறப்பெய்தியானை வேள்வியான் விறன்மிகுத்தன்று. (இ - ள்.) கேட்கக் கடவன கேட்டுத் தலைமை பெற்றவனை யாகத்தான் வெற்றியைப் பெருக்கியது எ-று. (வ - று.) ஓதங் கரைதவழ்நீர் வேலி யுலகினுள் வேதங் கரைகண்டான் வீற்றிருக்கும்-ஏதம் சுடுசுடர் தானாகிச் சொல்லவே வீழ்ந்த விடுசுடர் வேள்வி யகத்து. (இ - ள்.) திரை கரைமீதே தத்தும் கடலேவேலியாகவுடைய நிலத்திடத்து நான்கு வேதத்தினையுங் கற்றவன்தாபதர்க்கரசாய்ச் செம்மாந்திருக்கும்; குற்றத்தைச்சுடும் நெருப்புத்தானாகி எல்லாரும் போற்ற விரும்பின பரந்த அனலையுடைய யாகத்திடத்து எ-று. வேள்வியகத்து வீற்றிருக்குமென்க. (9) 164. வாணிக வாகை செறுதொழிலிற் சேணீங்கியான் அறுதொழிலு மெடுத்துரைத்தன்று. (இ - ள்.) பொல்லாத வினையினின்றும் நீளக் கழிந்தவனுடைய ஆறு செய்தியும் உயர்த்திச்சொல்லியது எ-று.
1. தொல். புறத். சூ. 17, இளம். மேற். 2. சிலப். 23: 72. 3. புறநா. 166, உரை, மேற். 4. திரி. 70; பெருங். 3. 3. 79-80. (பி-ம்.)5. 'வஞ்சமிலாக்' 6. 'வெஞ்சமத்து' 7. 'பொரச்செல்லும்'. |