(வ - று.) கயக்கிய நோயவாய்க் கையிகந்துநம்மை இயக்கிய யாக்கை யிறாமுன்-மயக்கிய பட்படா வைகும் பயன்ஞால நீள்வலை உட்படாம் போத லுறும். (இ - ள்.) கலக்கிய நோவுகளையுடையவாய்க்கைகடந்து நம்மை நடத்திய சரீரம் ஒடிவதற்கு முன்னேமருளப் பண்ணின குணம் அடுத்துத் தங்கும் பயத்தையுடையஉலகமாகிய நீண்ட கண்ணியுள்ளே அகப்படாமாகி நன்னெறிக்கட்சேர்தல் உறுதியுடைத்து எ-று. பண்பு: பட்பென விகாரமாயிற்று. (34) வாகைத்திணைப்பாட்டு ஒன்றும், துறைப்பாட்டுமுப்பத்துமூன்றும் முடிந்தன. எட்டாவது வாகைப்படலம்முற்றிற்று.
ஒன்பதாவது பாடாண்படலம் (சூத்திரம் 9) | பாடாண் பாட்டே வாயி னிலையே கடவுள் வாழ்த்தொடு பூவை நிலையே பரிசிற் றுறையே யியன்மொழி வாழ்த்தே கண்படை நிலையே துயிலெடை நிலையே | 5 | மங்கல நிலையொடு விளக்கு நிலையே கபிலை கண்ணிய புண்ணிய நிலையே வேள்வி நிலையொடு வெள்ளி நிலையே நாடு வாழ்த்தொடு கிணையது நிலையே களவழி வாழ்த்தே | 10 | வீற்றினி திருந்த பெருமங் கலமே குடுமி களைந்த புகழ்சாற்று நிலையே மணமங் கலமே பொலிவுமங் கலமே நாண்மங் கலமே பரிசி னிலையே பரிசில் விடையே யாள்வினை வேள்வி | 15 | பாணாற்றுப் படையே கூத்தராற்றுப் படையே 1பொருநாற்றுப் படையொடு விறலியாற்றுப் படையே வாயுறை வாழ்த்தே செவியறி வுறூஉக் குடைமங் கலமொடு வாண்மங் கலமே மண்ணுமங் கலமே யோம்படை யேனைப் | 20 | புறநிலை வாழ்த்து முளப்படத் தொகைஇ |
(பி-ம்.) 1. 'பொருநராற்றுப்படை' |