186. கிணைநிலை 1தண்பணை வயலுழவனைத் தெண்கிணைவன் றிருந்துபுகழ்கிளந்தன்று. (இ - ள்.) மருதநிலத்திற் கழனியிடத்து வேளாளனைத் தெளிந்த கிணை கொட்டுமவன் நல்ல கீர்த்தியைச்சொல்லியது எ-று . (வ - று.) பகடுவாழ் கென்று பனிவயலு 2ளாமை அகடுபோ லங்கட் டடாரித் - துகடுடைத்துக் குன்றுபோற் போர்விற் குருசில் வளம்பாட இன்றுபோ மெங்கட் கிடர். (இ - ள்.) ஏர்வாழ்கவென்று சொல்லிக்குளிர்ந்த கழனியுள் ஆமையினது வயிறுபோன்ற அழகியகண்ணினையுடைய கிணையை மாசைத்துடைத்துக் குன்றையொக்கும் 5நெற்போர்வினையுடைய உபகாரி தன் செல்வத்தைவாழ்த்த இன்று நீங்கும் , எங்கட்கு மிடி எ-று . (32) 187. பொருளொடு புகறல் வையகத்து விழைவறுத்து மெய்யாய பொருணயந்தன்று. (இ - ள்.) பூமியிடத்துப் பற்றாய விருப்பத்தினைஒழித்து மெய்ம்மையான பொருளை விரும்பியது எ-று . (வ - று.) ஆமினி மூப்பு மகன்றதிளமையும் 3தாமினி நோயுந் தலைவரும் - யாமினி மெய்யைந்து மீதூர வைகாது மேல்வந்த ஐயைந்து மாய்வ தறிவு. (இ - ள்.) இனி மூப்பும் ஆம்; கழிந்தது இளமையும்; நோய்தாமும் இனிமேல் வரும்; யாம் இப்போதுசரீரத்திற் பஞ்சேந்திரியங்கள் அடரத்தங்காதுதலைவந்த பஞ்சவிருத்தியைத் தெரியுமது நல்லறிவு எ-று . ஐயைந்தாவன : மெய்ம்முதலான ஞானேந்திரியங்கள்ஐந்தும் , பூமி முதலான மகாபூதங்கள் ஐந்தும் ,சுவைமுதலான தன்மாத்திரைகள் ஐந்தும் , வாக்குமுதலானகன்மேந்திரியங்கள் ஐந்தும் , மனமுதலான அந்தக்கரணம்நான்கும் சீவனுமாகிய ஐந்தும் . (33) 188. அருளொடு நீங்கல் 4ஒலிகடல் வையகத்து நலிவுகண்டு நயப்பவிந்தன்று. (இ - ள்.) முழங்கும் கடலுலகத்துத் துயரத்தைப்பார்த்துப் பற்றை ஒழிந்தது எ-று .
1. சிலப். 10 : 138 - 9 , அடியார். மேற்.பகடு-ஏர்; நாலடி. 2. 2. பு-வெ. 206; அகநா. 356 : 2-4; புறநா. 70 :2-3; 249 : 4. 3. சீவக. 247, ந. மேற். 4. மாறன். ப. 42, மேற். 5. (பி.ம்.)'நெற்போர் விளக்கத்தை' |