பக்கம் எண் :

(வ - று.) கொங்கலர்தார் மன்னருங் கூட்டளப்பக்கூற்றணங்கும்
வெங்கதிர்வேற் றண்டெரியல் வேந்தற்குப் - பொங்கும்
புனலாடை யாளும் புனைகுடைக்கீழ் வைகக்
கனலா துயிலேற்ற கண்.

(இ - ள்.) திறைகொடாத மதுமலர்ந்த மாலைவேந்தரும்திறைகொடுப்ப இயமனைவருத்தும் வெய்ய ஒளிவேலினையும் குளிர்ந்தமாலையினையுமுடைய அரசனுக்கு மீதெழும் கடலாகியபுடைவையையுடைய நிலமகளும் கைசெய்த குடைக்கீழ்த் தங்குதலான்அழலாவாய் உறக்கத்தை எதிர்ந்தன, விழிகள் எ-று.

(29)

184. 1அவிப்பலி

வெள்வா ளமருட் 2செஞ்சோறல்ல
துள்ளா மைந்த ருயிர்ப்பலி கொடுத்தன்று.

(இ - ள்.) தெளிந்த வாட்பூசலிடத்துச் 2செஞ்சோற்றுக்கடனன்றிநினையாத மறவர் உயிரைப் பலியாகக் கொடுத்தது எ-று.

ஆவியென்பது அவியெனக் குறுகிநின்றது.

(வ - று.)3சிறந்த திதுவென்னச்செஞ்சோறு வாய்ப்ப
மறந்தரு வாளம ரென்னும் - பிறங்கழலுள்
ஆருயி ரென்னு மவிவேட்டா ராங்கஃதால்
வீரியரெய் தற்பால வீடு.

(இ - ள்.) தலைமைமிக்கது இதுவெனச் சொல்லிச் செஞ்சோற்றுக்கடன் தப்பாதபடி சினங்கொண்டவாட்பூசலென்னும் பெருத்தநெருப்பினுட் பெறுதற்கரிய பிராணனென்னும் அவியைக் கொடுத்தார்; அவ்விடத்ததுவால், வீரத்தையுடையார் கிட்டுதற்பகுதியையுடையசுவர்க்கம் எ-று .

(30)

185. சால்பு முல்லை

வான்றோயு மலையன்ன
சான்றோர்தஞ் சால்புரைத்தன்று.

(இ - ள்.) ஆகாசத்தைக் கிட்டும் வரையையொத்தசான்றாளர் தம்முடைய அமைதியைச் சொல்லியது எ-று .

(வ - று.) உறையார் விசும்பி னுவாமதிபோல
4நிறையா நிலவுத லன்றிக் - குறையாத
வங்கம்போழ் முந்நீர் வளம்பெறினும் வேறாமோ
சங்கம்போல் 5வான்மையார் சால்பு.

(இ - ள்.) மழைநிறைந்த ஆகாயத்திடத்து 6உவாநாள்மதியை யொப்ப நிறைந்து மன்னுதலல்லது குறையாத மரக்கலம்பிளக்கும் கடலிடத்துப் பலபொருளினையும் பெறினும்வேறுபடுமோ , சங்கம்போலத் தூய்மையையுடையாரமைதி !எ-று .

(31)


1. சிலப். 5 : 76-88, அடியார். வி. 2. சீவக. 2240; கம்ப. கும்ப. 156; கலிங்க.477; வி. பா. 17 -ஆம் போர்.20 3. தொல். புறத். சூ. 17, இளம். மேற். 4. மதுரைக். 202-4; புறநா. 182. (பி.ம்.)5. 'வாய்மையார்'. 6. 'உவாநாளைமதியை'.