பக்கம் எண் :

181. மறமுல்லை

1வெள்வாள் வேந்தன் வேண்டியதீயவும்
கொள்ளா மறவன் கொதிப்புரைத் தன்று .

(இ - ள்.) தெளிந்தவாளினையுடைய மன்னன்விரும்பியது கொடுப்பவும் அதனைக்கொள்ளாத வீரனதுகனற்சியைச் சொல்லியது எ-று.

(வ - று.) வின்னவி றோளானும் வேண்டியகொள்கென்னும்
கன்னவி றிண்டோட் கழலானும் - மன்னன்முன்
ஒன்றா னழல்விழியா வொள்வாள் வலனேந்தி
நின்றா னெடிய மொழிந்து.

(இ - ள்.) சிலைகெழுமிய புயத்தினையுடைய அரசனும் விரும்பினவற்றை நீ கொள்கவென்று சொல்லாநிற்கும்; மலைபொருந்தின திண்ணிய புயத்தினையுடைய கழல்வீரனும்அரசன்முன் பொருந்தானாகி அழலாக நோக்கா ஒள்ளியநாந்தகத்தை மிசையேயெடுத்து வாளாது நின்றான், உயர்ந்தவார்த்தை பலவுஞ் சொல்லி எ-று .

(27)

182. குடை முல்லை

மொய்தாங்கிய முழுவலித்தோட்
கொய்தாரான் குடைபுகழ்ந்தன்று.

(இ - ள்.) பூசலைத்தடுத்த மிக்க உரத்தாலுயர்ந்த தோளினையுடைய மட்டஞ்செய்த மாலையான் குடையைப்புகழ்ந்தது எ-று .

(வ - று.) வேயுள் விசும்பு விளங்கு கதிர்வட்டம்
தாய புகழான் றனிக்குடைக்குத் - தோயம்
எதிர்வழங்கு கொண்மூ விடைபோழ்ந்த சுற்றுக்
கதிர்வழங்கு மாமலை காம்பு.

(இ - ள்.) போர்வை ஆகாயம்; இலங்கும் பருதிமேல்வட்டம்; பரந்தகீர்த்தியையுடையான்றன் ஒப்பிலாதகுடைக்கு . நீர்த்தாரையை எதிரே சொரியும் மேகம்இடைவிட்ட சுற்றுத்தாமம்; சந்திராதித்தர் வழங்குமாமேரு காம்பு எ-று .

'இடைபோழ்ந்து சுற்றிக் கதிர்வழங்குமாமலைகாம்பு' என்று பாடமோதி , 2மாகத்தைப்பிளந்து சுற்றிக் கதிர்வழங்குமாமலை காம்பென்பாருமுளர் .

(28)

183. கண்படை நிலை

மண்கொண்ட மறவேந்தன்
கண்படைநிலை மலிந்தன்று.

(இ - ள்.) வென்று பூமியைக் கைக்கொண்ட சினமன்னன்உறக்கத்தை மிகுத்தது எ-று .


1. பு-வெ. 184, 195.(பி-ம்.) 2. 'மேகத்தைப்'