பக்கம் எண் :

ஒருநாண் மடியி னுலகின்மே னில்லா
திருநால் வகையா ரியல்பு.

(இ - ள்.) பெரிய ஆபரணத்தினையும் நல்லோரிடத்துத் தலைவணக்கத்தினையும் மலரிட்டுத் தொடுத்த பசியமாலையினையும்வலிய வீரக்கழலினையும் தவளசத்திரத்தினையுமுடையவன்நாடு காத்தற்றொழில் வேண்டானாகி ஒரு வைகல் உள்ளமடியிற் பூமிமேற்றங்காது , குடிப்பிறப்பு முதலாகிய எண்வகையியல்புடையசான்றோர் தன்மை எ-று.

இயல்பு நில்லாதென்க .

(24)

179. இதுவுமது

தக்காங்குப் பிறர்கூறினும்
அத்துறைக் குரித்தாகும்.

(இ - ள்.) பொருந்தினபடி அந்நியர் சொல்லினும்முற்பட்ட துறைக்கு உரிமையுடைத்து எ-று .

(வ - று.)1ஊறின் றுவகையுள் வைகவுயிரோம்பி
2ஆறிலொன் றானா தளித்துண்டு - மாறின்றி
வான்காவல் கொண்டான் வழிநின்று வைகலும்
தான்காவல் 3கொண்ட றகும்.

(இ - ள்.) குற்றமின்றிப் பிரியத்திலேஅவதரிப்ப எல்லாவுயிரையும் பாதுகாத்துக் கொள்ளுங்கடனாகிய ஆறிலொன்றினை அமையாது பிறர்க்குங் கொடுத்து உண்டு எதிரின்றிச் சுவர்க்கலோகத்தைக் காவல் கொண்டதன் பிதாவின் நெறியே நிலைநின்று நாடோறும் மன்னன்றான் காவற்றொழிலை மேற்கொள்வது பொருந்தும் எ-று .

(25)

180. பேராண் முல்லை

உளம்புகல மறவேந்தன்
களங்கொண்ட சிறப்புரைத்தன்று.

(இ - ள்.) மனம் விரும்பச் சினமன்னன் போர்க்களத்தைக்கொண்ட மிகுதியைச் சொல்லியதுஎ-று .

(வ - று.)4ஏந்துவட் டானை யிரியவுறைகழித்துப்
போந்துவாண் மின்னும் பொருசமத்து - வேந்தர்
இருங்களி யானை யினமிரிந் தோடக்
கருங்கழலான் 5கொண்டான் களம்.

(இ - ள்.) 6உயர்ந்த வாட்சேனை உடையும்படிகூட்டை நீக்கப் பட்டுப்போந்து வாள் இலங்கும் பொராநின்றபூசலிடத்துப் பகைமன்னருடைய பெரிய மத்தவாரணத்திரள் கெட்டோடவலிய வீரக்கழலினையுடையான் கைக்கொண்டான் ,போர்க்களத்தை எ-று .

(26)


1. இ.வி. புறத். சூ. 15, உரை, மேற். 2. குறள். 48; இராமா. உத்தர. அரக்கர்.48; திருவிளை. நாட்டு. 28. 3. கொண்டல் : பெருங். 4. 7 : 133. 4. தொல். புறத். சூ. 16, இளம். மேற். ;இ.வி. புறத். சூ. 15, உரை, மேற். 5. பு-வெ. 225; புறநா. 4 : 3; 53 : 5 : 62 : 12 ;சீவக. 279, ந.வி.; சிலப். 28 : 104. (பி.ம்.)6. 'உயர்ந்த'