(இ - ள்.) எதிரின்றியே ஒழியச் சினமிகும் மேன்மேல் ஏறாநின்ற ஆண்மைத் தன்மையினையுடைய குடியொழுக்கத்தினை உயர்த்துச் சொல்லியது எ-று. (வ - று.)1கன்னின்றா னெந்தைகணவன் களப்பட்டான் முன்னின்று மொய்யவிந்தா ரென்னையர் -பின்னின்று கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மேலோடி 2எய்போற் கிடந்தானென் னேறு . (இ - ள்.) கல்லிலே பொருந்திநின்றான் என்தகப்பன்; என் கணவன் போர்க்களரியிலே பட்டான்; பகைவர் முன்னே நின்று எதிர்த்துப் பூசலிலேவிழுந்தார் என் தமையன்மார்; தன் சேனை கெடவும்கெடாதே பின்னே நின்று தன் கைசென்று அம்பைச்செலுத்தப் பகையரசன் மேலே சென்று எய்ப்பன்றிபோலேபட்டுக்கிடந்தான் என்னுடைய புதல்வன் எ-று . (22) 177. வல்லாண் முல்லை 3இல்லும் பதியு மியல்புங்கூறி 4நல்லாண் மையை நலமிகுத் தன்று. (இ - ள்.) இல்லையும் ஊரையும் இயல்பினையும் சொல்லி அழகிய ஆண்மைத் தன்மையை நன்மைபெருகச் சொல்லியது எ-று. (வ - று.) வின்முன் கணைதெரியும் வேட்டைச்சிறுசிறார் முன்முன் முயலுகளு முன்றிற்றே - மன்முன் வரைமார்பின் வேன்மூழ்க வாளழுவந் தாங்கி உரைமாலை சூடினா னூர். (இ - ள்.) வில்லின்முன்னே அம்பையாராயும்வேட்டையாடும் சிறு பிள்ளைகள் முன்னே முன்னே முயல்பாயும் இல்முன்னையுடைத்து; அரசனுடையமுன் மலைபோன்றஅகலத்துள் எஃகம் அழுந்த வாட்போரைத் தடுத்துக்கீர்த்தித்தெரியலைப் புனைந்தவன் பதி எ-று . பதி முன்முன் முயலுகளும் முன்றிற்றென்க. (23) 178. காவன் முல்லை தவழ்திரை முழங்குந் தண்கடல் வேலிக் கமழ்தார் மன்னவன் காவன்மிகுத் தன்று . (இ - ள்.) ஊருந்திரை ஆரவாரிக்கும்குளிர்ந்த கடலை வேலியாக உடைய ஞாலத்து மணநாறுமாலையினையுடையவேந்தன் பாதுகாத்தலைச் சிறப்பித்தது எ-று . (வ - று.) பெரும்பூட் சிறுதகைப் பெய்ம்மலர்ப்பைந்தார்க் கருங்கழல் வெண்குடையான் காவல் - விரும்பான்
1. குறள். 764, பரிமேல். மேற். 'கன்னின்றான்'; சீவக. 2302, 2. புறநா. 19 : 13-6; 283 :8; 290 : 5; 297 : 9-10; கலிங்க. 475. 3. புறநா. 170, உரை, மேற். (பி.ம்.)4. 'நல்லாண்மைநலம்'. |