பக்கம் எண் :

எட்டாவன; "குடிப்பிறப்புக் கல்விகுணம் வாய்மை தூய்மை, நடுச்சொல்லு நல்லணி யாக்கம்- கெடுக்கும், அழுக்கா றவாவின்மை யவ்வி ரண்டோடெட்டும் , இழுக்கா வவையின்க ணெட்டு " என்பதனானறிக.

(19)

174. கணிவன் முல்லை

துணிபுணருந் தொல்கேள்விக்
கணிவனது புகழ்கிளந்தன்று .

(இ - ள்.) நிச்சயித்துப் பலவுமறியும் பழைய கேள்விஞானத்தினையுடைய சோதிடநூல் வல்லவனது கீர்த்தியைச்சொல்லியது எ-று.

(வ - று.)1புரிவின்றி 2யாக்கைபோற் போற்றுவ போற்றிப்
பரிவின்றிப் பட்டாங் கறியத் - திரிவின்றி
விண்ணிவ் வுலகம் விளைக்கும் விளைவெல்லாம்
கண்ணி யுரைப்பான் கணி.

(இ - ள்.) தப்பாதபடி தன் உடம்புபோலே பரிகரிக்கக்கடவநூல்களைப் பலகாலுங் கற்று அடிப்படுத்தித் துன்பமின்றிஉண்மையுணரத் தப்பின்றிச் சுவர்க்கம் இப்புவி உண்டாக்கும்நிகழ்ச்சியெல்லாம் கருதிச்சொல்லுமவன் சோதிடவன் எ-று .

(20)

175. 3மூதின் முல்லை

அடல்வே லாடவர்க் கன்றியு மவ்வில்
மடவரன் மகளிர்க்கு மறமிகுத் தன்று .

(இ - ள்.) கொல்லும் வேலினையுடைய வீரர்க்கல்லதுஅந்த மறக்குடியில் மடப்பத்தினையுடைய அரிவைமார்க்கும்சினத்தைச் சிறப்பித்தது எ-று .

(வ - று.) வந்த படைநோனாள் வாயின்முலைபறித்து
வெந்திற லெஃக5 மிறைக்கொளீஇ - முந்தை
முதல்வர்கற் றான்காட்டி 6மூதின் மடவாள்
புதல்வனைச் செல்கென்றாள் போர்க்கு.

(இ - ள்.) தங்கள்மேல் எடுத்துவந்த சேனையைப்பொறாளாய்ப் பிள்ளை வாயின் முலையை வாங்கி வெவ்விய வெற்றியினையுடைய வேலை முன்பு பகைவரைக் குத்திவளைந்த வளைவுதவிர்த்து முன்பு தன்வழியினுள்ளோர் நடுகல்லைத்தான் அவனுக்குக்காட்டிப் பழைய மறக்குடியிற் பேதையானவள் பூசலுக்குப் பிள்ளையைப் போவாயாகவென்று சொன்னாள். எ-று.

இறைக்கொளீஇ - கையிலே கொடுத்தென்றுமாம்.

(21)

176. ஏறாண் முல்லை

மாறின்றி 8மறங்கனலும்
ஏறாண்குடி யெடுத்துரைத்தன்று.


1. தொல். புறத். சூ. 16, இளம். மேற். 2. ஆசார. 96. 3. தொல். புறத். சூ. 4, இளம். வி. 4. புறநா. 284 : 6-7, அடிக். 5. புறநா. 19 : 15; 279 :2. (பி.ம்.)6. 'புரிவின்றித் தன்யாக்கைபோற்றுவ' 8. 'மனங்'