பக்கம் எண் :

(இ - ள்.) குற்றத்திடத்துச் செல்லாதே மனுநீதியை உயர்த்தி மயிரால் மிக்க கண்ணினையுடையவீரமுரசு ஒலிப்ப எல்லாவுயிர்க்கும் நாவலந்தீவின்கண்ஆதித்தனையொத்து வேந்தன் நடத்தல் முறைமை எ-று .

முல்லை - இயல்புமிகுதி.

(17)

172. பார்ப்பன முல்லை

கான்மலியு நறுந்தெரியற் கழல்வேந்தரிகலவிக்கும்
1நான்மறையோ னலம்பெருகு நடுவுநிலை யுரைத்தன்று.

(இ - ள்.) செவ்விமிக்க நறுநாற்றஞ் செறிந்த மாலையினையுடைய வீரக்கழலாற் பொலிந்த மன்னர்மாறுபாட்டைக்கெடுக்கும் நான்கு வேதத்தினையுடையோன்நன்மைமிக்க செப்பமுறைமையைச் சொல்லியது எ-று .

(வ - று.) ஒல்லெனீர் ஞாலத் துணர்வோவிழுமிதே
நல்லிசை முச்செந்தீ நான்மறையோன் - 4செல்லலும்
வென்றன்றி மீளா விறல்வேந்தர் வெம்பகை
என்றன்றி மீண்ட திலர் .

(இ - ள்.) அநுகரண ஓசையையுடைய கடல்சூழ்ந்தவையகத்து அறிவு சாலச் சீரிதாகவிருந்தது; அழகியபுகழினையும் மூன்று செந்தீயினையும் நான்கு வேதத்தினையுமுடையோன்சந்துவேண்டிச் சென்றானாகப் பகைமேல் எடுத்துச்சென்றால் வென்றல்லது மீளாத வெற்றி மன்னர் வெய்யமுரணென்றல்லது பொருந்தி மீண்டதிலர் எ-று .

(18)

173. அவைய முல்லை

நவைநீங்க நடுவுகூறும்
அவைமாந்த ரியல்புரைத்தன்று.

(இ - ள்.) குற்றம் கெட நடுவுசொல்லும் அவைக்களத்துச்சான்றோர் தன்மையைச் சொல்லியது எ-று.

(வ - று.)1தொடைவிடை யூழாத் தொடைவிடைதுன்னித்
தொடைவிடை யூழிவை தோலாத் - தொடைவேட்
டழிபட 5லாற்ற லறிமுறையேன் 3றெட்டின்
வழிபடர்தல் வல்ல தவை.

(இ - ள்.) 6அனுயோகமும் உத்தரமும்முறைமையாக 1அனுயோகத்தையும் உத்தரத்தையும்புத்திபண்ணித் தொடையும் விடையும் முறைமையும் என்றிவைதப்பாத சயபத்திரத்தைவிரும்பித் தோல்வியும்வெற்றியும்நெறியாலே நிச்சயிக்கும் முறைமையை மேற்கொண்டு எட்டின் நெறியே செல்லல்வல்லது அவைக்களம் எ-று .


1. புறநா. 305 : 2. 2. குறள். 118, பரிமேல். வி. 3. பு-வெ. 178 : 4 தொல். புறத். சூ. 21 ;மதுரைக். 161-3, உரை மேற். (பி.ம்.)4. 'செல்லவும்'. 5. 'லாற்றா'. 6. 'அபியோக'.