பக்கம் எண் :

(வ - று.)1கவலை மறுகிற் கடுங்கண்மறவர்
உவலைசெய் கூரை யொடுங்கத் - துவலைசெய்
கூதிர் நலியவு முள்ளான் கொடித்தேரான்
மூதின் மடவாண் முயக்கு .

(இ - ள்.) கவர்த்த தெருவிடத்துத் தறுகண்வீரர் தழையாற் பண்ணின கூரையிடத்திலேயடங்கச்சிறுதுளியைப் பண்ணும் கூதிர்க்காலம் வருத்தவும் நினையான், பதாகையாற் பொலிந்த தேரினையுடையான், பழையமனையில், மனைக்கிழத்தி புணர்தலை எ-று .

(24)

170. வாடைப் பாசறை

வெந்திறலான் வியன்பாசறை வேல்வயவர் விதிர்ப்பெய்த
வந்துலாய்த் துயர்செய்யும் வாடையது 3மலிபுரைத்தன்று.

(இ - ள்.) வெய்ய வலியினையுடையானது பரந்தவீடாரத்து வேல் வீரர் நடுக்கமுற வந்தியங்கிவருத்தம் பண்ணும் வாடைக்காற்றின் மிகுதியைச் சொல்லியது எ-று.

(வ - று.)5வாடை நலிய வடிக்கண்ணா4டோணசை
ஓடை மழகளிற்றா னுள்ளான்கொல் - கோடல்
முகையோ டலம்வர முற்றெரிபோற் பொங்கிப்
பகையோடு பாசறையு ளான்.

(இ - ள்.) வாடைக்காற்று வருத்த மாவடுப்போன்றகண்ணாளுடைய தோளை நச்சுதல் பட்டத்தையுடைய இளவாரணத்தான்நினையான் போலும்; காந்தண்முதல் மொட்டுடனே சுழலமுதிர்ந்த நெருப்புப்போற் கோபித்துச் சத்துருக்கள்கெட்டோடும் பாடி வீட்டிலிருந்தான் எ-று.

பாசறையுளான் உள்ளான்கொலென்க .

(16)

171. 2அரச முல்லை

செருமுனை யுடற்றுஞ் செஞ்சுடர் நெடுவேல்
இருநிலங் காவல னியல்புரைத் தன்று .

(இ - ள்.) பெரும் பகையை வருத்தும் சிவந்தசோதியாற் பொலிந்த நெடிய வேலினையுடைய பெரியபுவியைக்காக்கும் அரசன் தன்மையைச் சொல்லியது எ-று.

(வ - று.) செயிர்க்க ணிகழாது செங்கோலுயரி
மயிர்க்கண் முரச முழங்க - உயிர்க்கெல்லாம்
நாவ லகலிடத்து ஞாயி றனையனாய்க்
காவலன் சேறல் கடன் .


1. தொல். புறத். சூ. 17, இளம். மேற். 2. சீவக. 547, ந. (பி-ம்)3. 'மலிவு' 4. 'டோணிலை' 5. நெடுநல் வாடையிலுள்ள இறுதி வெண்பா.