167. அறிவன் வாகை புகழ்நுவல முக்காலமும் நிகழ்பறிபவ னியல்புரைத்தன்று. (இ - ள்.) தன் கீர்த்தியைச் சொல்லமூன்றுகால நிகழ்ச்சியையும் அறியுமவன் தன்மையைச் சொல்லியது எ-று. (வ - று.)1இம்மூ வுலகி னிருள்கடியு மாய்கதிர்போல் அம்மூன்று முற்ற வறிதலாற்-றம்மின் உறழா மயங்கி யுறழினு மென்றும் 2பிறழா பெரியோர்வாய்ச் சொல். (இ - ள்.) நாகலோகம் பூலோகம் சுவர்க்கலோகமென்னும்மூன்று லோகத்திலுமுள்ள அந்தகாரத்தைப்போக்கும்அழகிய ஆதித்தனையொப்ப இறப்பு நிகழ்பு எதிர்வெனும் மூன்று காலத்தையும் முடிய அறிதலால் தம்மில் தாம்மாறுபடாதன மாறுபட்டுப் 3பால்புளித்துப் பகலிருண்டுமாறுபடினும் எக்காலத்தினுந் தப்பா, சான்றோர் மெய்ம்மொழி எ-று. 4ஒருபாற் கிளவி எனைப்பாற் கண்ணும்வரும் ஆதலால்,'அறிபவன்' என்றார். (13) 168. தாபத வாகை தாபத முனிவர் தவத்தொடு முயங்கி ஓவுத லறியா வொழுக்குரைத் தன்று. (இ - ள்.) தபோதனவேடத்தர் புண்ணியத்தோடுதழுவி ஒழிதலுணராத நடையைச் சொல்லியது எ-று. (வ - று.)5நீர்பலகான் மூழ்கி நிலத்தசைஇத்6தோலுடீஇச் சோர்சடை தாழச் சுடரோம்பி-ஊரடையார் கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல் வானகத் துய்க்கும் வழி. (இ - ள்.) நீரிலே 7பலகால்முழுகி வெறுநிலத்துச்சாய்ந்து மான்றோலைப் புடைவையாகவுடுத்து நெகிழ்ந்தசடைவீழத் தீயைப்பரிகரித்துப் பதியிடத்து அணையாராய்க்காட்டிலுள்ள சாகமூலபலங்களைக் கைப்பற்றித் தெய்வத்தினையும் விருந்தினையும் போற்றுமது, சுவர்க்கத்துத் தம்மைச் செலுத்தும் நெறி எ-று. (14) 169. கூதிர்ப் பாசறை கூற்றனையான் வியன்கட்டூர்க் கூதிர்வான்8றுளிவழங்க (இ - ள்.) கூற்றையொத்தவனுடைய அகன்ற பாசறையிடத்துக் கூதிர்க்காலத்து மேகம் உறையைக்கொடுப்பப் பிரிவாற்றாமை மேன்மேன்மிகவும் கூரிய எஃகினையுடையான் கருணையை ஒழிந்தது எ-று.
1. பெருங். 4.5:122-4. 2. நற். 289: 2-3; பதிற். 63: 6-7. 3. புறநா. 2: 17-8. 4. தொல்.பொருளியல்,சூ.28. 5. தொல். புறத். சூ. 16, இளம். மேற். குறள். 26, பரிமேல். வி. (பி-ம்.)6. 'தோலுடையாச்' 7. 'பலகாலும்' 8. 'றளி' |