பக்கம் எண் :

252

லானும், அஃது இணைதற்குக் ககரம் சந்தியாகத் தொடர்தலானும் பகுபதம் ஒன்பது என்ற எழுத்து எல்லையைக் கடந்துவரும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஒட்டுப்பெயர்-பிரித்துத் தனித்தனியே பொருள் செய்யஇயலாதபடி ஒரு பிண்டமாக இணைந்து பொருள் தரும் பெயர்களது ஈட்டம் ஆதலின், ‘சேரமான் யானைக்கட் சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை’ முதலியன ஒரு சொல் போலவே கொள்ளப்படும். பல சொற்களாகக் கொள்ளின், சேரமானும் யானைக்கட்சேயும் மாந்தரனும் சேரலும் இரும்பொறையும் வெவ்வேறு பெயர்களாகிப் பலரையும் குறிக்குமாறு அறிக. ஒட்டுப் பெயர்க்கு எழுத்து வரையறை இல்லை என்பதைப் ‘பகாப்பதம் ஏழும்’ நன். 29 என்ற நூற்பா உரையுள் மயிலைநாதரும் குறிப்பிட்டுள்ளார்.

‘இனி, ‘ஓரெழுத்து ஒருமொழி’ தொல்.45 என்ற நூற்பாஉரையில் நச்சினார்க்கினியர் ஆ கா-நா-ஓரெழுத்து ஒருமொழி; மணி-வரகு-கொற்றன்-ஈரெழுத்து ஒருமொழி; குரவு-அரவு-மூவெழுத்து ஒரு மொழி; கணவிரி-நாலெழுத்து ஒருமொழி; அகத்தியனார்- ஐயெழுத்து ஒருமொழி; திருசிற்றம்பலம்-ஆறெழுத்து ஒருமொழி; பெரும்பற்றப்புலியூர். ஏழுஎழுத்து ஒருமொழி’ என எடுத்துக்காட்டி, “ஆசிரியர் ஒற்றும் குற்றுகரமும் எழுத்து என்று கொண்டனர் ஆதலின் மா-கா-என்கின்ற சொற்கள் மால் கால் என ஒற்று அடுத்துழி ஒற்றினான் வேறு பொருள்தந்து நிற்றலின் இவற்றை ஈரெழுத்து ஒருமொழி என்றும், நாகு வரகு என்னும் குற்றுகர ஈற்றுச் சொற்களின் குற்றுகரங்கள் சொல்லோடு கூடிப் பொருள்தந்து நிற்றலின் இவற்றை ஈரெழுத்து ஒரு மொழி மூவெழுத்து ஒருமொழி என்னும் கோடும் என்பார்க்கு, ஆசிரியர் பொருளைக் கருதாது மாத்திரை குறைந்தமை பற்றி, உயிரில் எழுத்தும் எண்ணப்படாஅ’ தொல். செய்.44 ‘குறிலே நெடிலே குறிலிணை’