253 தொல். செய்.3 என்னும் செய்யுளியல் சூத்திரங்களால் இவற்றை எழுத்து எண்ணவும் அலகிடவும் பெறா என விலக்குவர் ஆதலின், அவற்றால் ஈண்டு ஈரெழுத்து ஒரு மொழியும் மூவெழுத்து ஒருமொழியும் கொள்ளின் மாறுகொளக்கூறல் என்னும் குற்றம் தங்கும் என மறுக்க” என்றார். இனி, ‘நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒருமொழி’ தொல். 43 ‘குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைபு இலவே’ தொல். 44 என்பனவற்றான் மெய்க்குக் குறுமை நெடுமை இன்மையின் உயிரும் உயிர்மெய்யும் ஆகிய நெடிலும் குறிலுமே மொழியாம் என்று கூறி, மீட்டும் அதனையே இச் சூத்திரத்தான் ‘ஓரெழுத்து ஒரு மொழி’ என்று எடுத்து அதனோடே ஈரெழுத்தையும் இரண்டு இறந்ததனையும் கூட்டி மொழியாகக் கோடலின். ஒற்றினைக் கூட்டி எழுத்தாகக்கோடல் ஆசிரியருக்கு கருத்தன்மை உணர்க. ‘அகரமுதல்-னகர இறுவாய் முப்பஃது என்ப’ தொல். 1 என ஒற்றினையும் எழுத்து என்றது எழுத்தின் தன்மை கூறிற்று; ஈண்டு மொழியாந்தன்மை கூறிற்று” எனவும். ‘மொழிப்படுத்து இசைப்பினும்’ தொல். 53 என்ற நூற்பா உரையில் ‘இஃது ஒற்றும் குற்றுகரமும் ஈண்டு எழுத்துக்களொடு கூட்டி எண்ணப்பட்டு நிற்கும் என்பநூஉம், செய்யுளியலுள் எண்ணப்படாது நிற்கும் என்பதூஉம் கூறுகின்றது’ எனவும்’ ‘ஒற்றும் குற்றுகரமும் பொருள்தரும் நிலைமையை ஆராய்ந்து சொல்லாகச் சேர்த்துச் சொல்லினும். செய்யுளியலுள் ஒற்றும் குற்றுகரமும் பொருள்தருமேனும் மாத்திரைகுறைந்து நிற்கும் நிலைமையை நோக்கி எழுத்து எண்ணப்படா என்று ஆண்டைக்கு வேறாகக்கூறினும், அவ்விரண்டு இடத்தும் அரைமாத்திரை பெற்று நிற்கும் ஒற்றும் குற்றுகரமும் |