254 முற்கூறிய எழுத்தாம் தன்மை ‘திரியா என்று கூறுவர் புலவர்’ எனவும், ‘இதனால் ஒற்றும் குற்றுகரமும் எழுத்தாகி நின்று பொருள்தந்தும் எழுத்தெண்ணவும் அலகிடவும் பெறா என்பதாயிற்று’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளசெய்திகள் இவ்வாசிரியருக்கு உடன்பாடு ஆவன அல்ல ஆதலின், அவர் செய்யுளியலில் இவை பற்றிக் கூறிய செய்தி பொருள் பற்றிய மொழி ஆக்கத்தின்கண் பொருந்தாது என்று குறிப்பிட்டு, ஆசிரியர் குற்றியலுகரத்தையும் எழுத்தாக எண்ணி உயிர்த் தொடர் முதலாகப் பெயரிட்டுள்ளதனைக் குறிப்பிடுகிறார். இலக்கண விளக்கச் சூறாவளி நன்னூலார் பதவியல் கூறியதற்கு முதல்நூல் வடநூல் ஆகலின், அது தோன்ற மொழியியல் என்னாது பதவியல் என வடசொல்லான் அதற்குப் பெயரிட்டு. அவ்வோத்துள் வடஎழுத்துத் தமிழில் வருமாறும் கூறினார். இவர் தமிழ் மொழி மாத்திரைக்கே இலக்கணம் கூறுதும் எனப் புகுந்தமையான், பதவியல் என வடமொழியால் குறிப்பிடுதல் பழுதாம் என்க. எழுத்துத் தனித்து நிற்றலானும் ஒன்றொடு ஒன்று தொடர்ந்து நிற்றலானும் அன்றே தனிமொழி தொடர் மொழி எனப் பெயர் பெற்றன? அங்ஙனம் ஆகலின் ஈரெழுத்து இணைந்ததனையும் தொடர்மொழி என்னாக்கால், அவை தொடர்ந்தனவும் அல்லவாய்ப் பொருளை விளக்குதலும் இல்லையாம் ஆகலின், ஈரெழுத்து ஒரு மொழியும் தொடர்மொழி என்றலே ஆசிரியர் தொல்காப்பியனாருக்கும் கருத்து ஆயினும் ‘தொடாஅல் இறுறி’ தொல். 214 எனவும், ‘சொல்லிய தொடர் மொழி இறுதி தொல். 145 எனவும், ‘மகரத் தொடர் மொழி மயங்குதல் வரைந்த-னகரத் தொடர்மொழி’ தொல். 82 எனவும், 'நெட்டெழுத்து இம்பரும் தொடர் |