பக்கம் எண் :

255

மொழி ஈற்றும்’ தொல்.36 எனவும், ஈரெழுத்துத் தொடர்மொழிக்கும் இரண்டனை இறந்த தொடர் மொழிக்கும் முடிவு வேறுபாடுகண்டு. முன்னர்ச் செய்கை செய்வதற்கு ஏற்ப ஈண்டு ஈரெழுத்து ஒருமொழி எனவும் தொடர்மொழி எனவும் பெயரிட்டுக் கருவி செய்தார். இதுவே ஆசிரியர் கருத்தாதல் ‘தொடர்மொழி’ என வாளா கூறாது ‘இரண்டு இறந்து இசைக்கும் தொடர் மொழி’ தொல். 45 என அடைகொடுத்து ஓதியதே இரண்டனை இறவாது இசைக்கும் தொடர்மொழியும் உண்டு எனப் பொருள்கொளக் கிடத்தலான் அறிக. நன்னூலார் கொண்ட நயத்திற்கு அவ்வாறு கருவி செய்ய வேண்டாமையின் இணைந்து இசைக்கும் தொடர்மொழியை வேறு கூறாது தொடர்மொழி என ஒன்றாகக் கூறினார். இவர் அக்கருத்து அறியாது தமக்கு வேண்டியவாறே உரைத்தார்.

இன்னும் இவ்வியல்முழுதினும் இவர் கூறியவற்றுள் குற்றங்களை விரிக்கப்புகின், விளையாட்டு மகளிர் இட்ட மணல்சோற்றில் கல் ஆராயப்புகுதலோடு ஒக்கும் என்று ஒழிக. அவை எல்லாம் விருத்தியுள் கூறியது பற்றி உய்த்து உணர்ந்து கொள்க.

சொல்லியல்பு சிறிதும் உணராமையான் தமக்கு வேண்டியவாறு எல்லாம் கூறினார்.

அமைதி

ஓன்று இரண்டு பல என்று குறிப்பிடும் தமிழ் மரபு ஈரெழுத்து ஒரு மொழிக் குன்றியலுகரம். தொடர் மொழிக் குன்றியலுகரம் என்பனவற்றை விளக்கிக்கூறப் பயன்படுதலானும், இவர் கூறும் புணர்ச்சிவிதிக்கண்ணும் ‘குறில்வழிலள’ நன்.228 முதலியவற்றிற்கு ஈரெழுத்து மொழியும் தொடர் மொழியும் என்ற பாகுபாடு பயன் தருதலானும் தொல்காப்பியனாரை ஒட்டி இவரும்