256 இணைமொழி, தொடர்மொழி என இரண்டாகப் பகுத்ததனால் குறைவு ஒன்றும் இல்லை; மாறாகத் தெளிவே உள்ளது. பதவியலின்கண் வடமொழி ஆக்கம் ஒன்று நீங்கலாக நன்னூலார் சுட்டிய பிறவற்றை எல்லாம் குறிப்பிட்டுள்ளார் ஆதலின். வடமொழி மரபு பற்றியவேனும் தமிழ் மொழிக்கும் தேவையான பகுதி விகுதி முதலிய பாகுபாடுகளை விளக்கிக்கூறும் இவ்வியலை இவரும் பதவியல் என்று பெயரிட்டது பொருத்தமே என்று அறிக. நிலம், நீர்-இவை பிரிக்கப்படாத தனிமொழி. தேரன்,ஊரன்-இவை பிரிக்கப்படும் இணைமொழி மூவர் வந்தார், அரசர் கூடினார்-இவை தொடர்ந்து வந்த துணைமொழி நங்கை, வேங்கை-இவை இருபொருள் கொண்ட பொதுமொழி முனிவர்கள், தேவர்கள்-இவை பன்மையைக் காட்டும் கணமொழி ஆண், பெண்-இவை இருதிணையிலும் கலந்து பொதுவாக வந்த கலப்புமொழி. (மு.வீ.மொ. 9) ஒத்த நூற்பாக்கள் : ‘ஓரெழுத்து ஒருமொழி ஈரெழுத்து ஒருமொழி இரண்டுஇறந்து இசைக்கும் தொடர்மொழி உளப்பட மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே,’ தொல். 45 ‘எழுத்தே தனித்தும் தொடர்ந்தும் பொருள்தரின் பதமாம் அதுகபாப் பதம்பகு பதமென் இருபால் ஆகி இயலும் என்ப.’ நன். 128 |