257 ‘பகாப்பதம் ஏழும் பகுபதம் ஒன்பதும் எழுத்துஈ றாகத் தொடரும் என்ப,’ நன்.138 ‘சொன்ன எழுத்தினால் சொல்வதே சொல்லாம்.’ ‘மொழியே, தனிஇணை துணைபொது கணம்தணம் கலந்து மொழிஓர் ஏழ்என மொழிநரும் உளரே’ மு. வீ. மொ.8 ‘மொழியே, ஓரெழுத்து ஆதிஒன் பான்எழுத்து அந்தமாம்.’ மு.வீ. மொ. 9 ஓரெழத்தொரு மொழி 39. நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஓருமொழி குற்றெழுத்து ஐந்தும் மொழிநிறைபு இலவே. இது மேற்கூறிப்போந்த மூவகை மொழியுள் ஓரெழுத்து ஒருமொழி இவ்வெழுத்துக்களான் ஆகும் என்கின்றது. இ-ள் : நெட்டெழுத்தாகிய ஏழும் ஓரெழுத்தான் ஆகும் ஒருமொழியாம்; குற்றெழுத்தாகிய ஐந்தும் ஓரெழுத்தாய் நின்று ஒருமொழியாக நிறைதல்இல, இவற்றுள் சில நிறைக்கும் என்றவாறு. ஏழும் என்ற முற்றுமை தொகுத்து ஈற்றசை ஏகாரம் விரித்தார். ஐந்தும் என்னும் முற்றும்மை ஈண்டு எச்சமாய் நின்றது. ஈண்டு நெட்டெழுத்து என்றது உயிரையும் உயிர் மெய்யையும்; குற்றெழுத்து என்றது உயிர் மெய்யுள் சிலவற்றை என்று கொள்க. வரலாறு : ஆ ஈ ஊ ஏ ஐ ஓ எனவும், கா தீ பூ சே தை சோ கௌ எனவும், து நொ எனவும் வரும். பிறவும் அன்ன. ஒளகாரம் உயிர்மெய்க்கண் அல்லது வாராது. ஊ-இறைச்சி; ஓ-மதகுநீர்தாங்கும் பலகை; சோ-அரண்! உகர ஒகரங்கள் து நொ என மெய்யோடு கூடி அல்லது |