258 வாராமையானும், ஒகரம் ஒழிந்த ஏனை நான்கு உயிரும் அக்கொற்றன் இக்கொற்றன் உக்கொற்றன் எப்பொருள் என இடைச்சொல்லாய்ப் பெயரைச் சார்ந்து நின்று சுட்டுப்பொருளும் வினாப்பொருளும் உணர்த்துவது அல்லது தனித்துநின்று உணர்த்துதல் ஆற்றாமை யானும் ‘குற்றெழுத்து ஐந்து மொழிநிறைபுஇல’ என்றார். ‘நெட்டெழுத்து ... ... இலவே’ என்றாரேனும் ஓரெழுத்து ஒருமொழி நெட்டெழுத்து ஏழானும் குற்றெழுத்துள் சிலவற்றானும் ஆகும் என்பது கருத்தாகக் கொள்க. அங்ஙனம் கொள்ளவே. ஏனை இரு வகை மொழியும் உயிர் ஒற்று உயிர்மெய்களான் ஏற்ற பெற்றி ஆகும் எனக் கோடும். விளக்கம்: ‘முற்றிய உம்மை தொகைச்சொல் எச்சக் கிழவி உரித்து மாகும்’ [மருங்கின் தொல். சொல். 287 என்பததனால், ‘குற்றெழுத்து ஐந்தும் மொழிநிறைபு இலவே’ என்பதற்குச் சில மொழியாக நிரம்பும் எனப் பொருள் உரைத்தார். நன்னூலார் நெட்டெழுத்துக்களை உயிர் உயிர்மெய் என இருகூறாகப் பிரித்து விரித்து. ‘உயிர்மவில் ஆறும் தபநவில் ஐந்தும் கவசவில் நான்கும் யவ்வில் ஒன்றும் ஆகும்நெடில் நொது ஆங்குறில் இரண்டோடு ஓரெழுத்து இயல்பதம் ஆறேழ் சிறப்பின்’ நன்.128 என நூற்பாவும் யாத்துள்ளார். ‘நெட்டெழுத் தேழே ஓரெழுத்து ஒருமொழி’ தொல். 43 “இஃது ஓரெழுத்து ஒருமொழி உணர்த்துதல் நுதலியவற்றுள் நெட்டெழுத்தான் ஆம் மொழிஆக்க |