பக்கம் எண் :

259

கூறுகின்றது. நெட்டெழுத்தாகிய ஏழும் ஓரெழுத்தான் ஆகும் ஒரு மொழியாம் என்றவாறு.

முற்றும்மை தொகுத்து ஈற்றசை ஏகாரம் விரித்தார். ஆ ஈ ஊ ஏ ஐ ஓ எனவரும். ஒளகாரம் உயிர்மெய்க்கண் அல்லது வாராது. ஊ என்பது தசை. இஃது உயிர்க்கும் உயிர்மெய்க்கும் விதி கா தீ பூ சே தை கோ எனவரும். இவை தம்மை உணர நின்றவழி எழுத்தாம்; இடை நின்று பொருள் உணர்த்தியவழிச் சொல்லாம். நெட்டெழுத்து ஏறியமெய் நெட்டெழுத்தாயும் குற்றெழுத்து ஏறிய மெய் குற்றெழுத்தாயும் நிற்றலேயன்றி, மெய்க்கு நெடுமையும் குறுமையும் இன்மை உணர்க.”

‘குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைபு இலவே,           தொல். 44

“குற்றெழுத்து ஐந்தும் மொழி ஆகா, அவற்றுள் சில மொழி ஆகும் என்பது உணர்த்துகின்றது. குற்றெழுத்தாகிய உயிர் ஐந்தும் தாமே நிறைந்து நின்று மொழியாம் என்றவாறு.

எ-டு: நொ. து எனவரும் இவை உயிர்மெய்க்கண் அல்லது வாராமையானும், உயிர்க்கண்ணும் ஒகரம் ஒழிந்த ஏனை நான்கு உயிரும் அக்கொற்றன் இக்கொற்றன் உக்கொற்றன் எப்பொருள் எனத் தனித்து நின்று உணர்த்தல் ஆற்றோ இடைச்சொல்லாய்ப் பெயரைச் சார்ந்து நின்று சுட்டுப்பொருளும் வினாப் பொருளும் உணர்த்துதலானும் ‘நிறைபுஇல’ என்றார். முற்றும்மை ஈண்டு எச்சப்பட்டு நின்றது என உணர்க” என்ற இவ்விரு நூற்பாக்களுக்கும் நச்சினார்க்கினியர் வரைந்த உரையே பெரும்பாலும் கொள்ளப்பட்டமை காண்க.

‘நெட்டெழுத்து ஏழும் ஓரெழுத்து ஒருமொழி’ என்பதன்கண் ஏழும் என்ற சொல்லின் உம்மையைத்