பக்கம் எண் :

260

தொகுத்து ஈற்றசை ஏகாரத்தை விரித்து ‘ஏழே’ என்றார்.

ஒத்த நூற்பாக்கள்:

‘நெட்டெழுத்து....................மொழி.’           தொல்.43

‘குற்றெழுத்து................இலவே’      44

‘உயிர்மவில்.............சிறப்பின.’           நன். 1 8

‘உயிர்நெடில் ஏழும் ஓரெழுத்து ஒருமொழி.’           மு. வீ. மொ. 1

‘குற்றெழுத்து ஐந்தும் கொளமொழி என்ப.’      2

‘உயிர்போல் கசதந பமவ என்மொழி
ஆகும் என்மனார் அறிந்திசி னோரே.’      3

பகாப்பதம்-இயல்பும் வகையும்

40. பகாஅப் பதம்பகா அப் பண்பின் பயின்று
பெயர்வினை இடைஉரி எனநால் வகைத்தே.

இது நிறுத்தமுறையானே பகாப்பதத்தினது இயல்பும் அதன் பகுதியும் உணர்த்துகின்றது.

இ-ள்: பகாப்பதம் பகுக்கப்படாத இயல்பின் கண்ணே மிக்குச்சென்று பெயர்ச்சொல்லும் வினைச் சொல்லும் இடைச்சொல்லும் உரிச்சொல்லும் என நான்கு திறத்தினை உடைத்தாய் வரும் என்றவாறு.

வரலாறு: ஆடூஉ மகடூஉ யானை குதிரை சோறு கூழ் உயிர் உடம்பு தீ நீர் எனவும், வான் நிலன் அகம் புறம் எனவும், யாண்டு வேனில் பங்குனி ஆதிரை பகல் இரா காலை மாலை நெருநல் இன்று எனவும், கண் செவி கை கால் கோடு தளிர் பூ காய் எனவும், செம்மை கருமை நெடுமை குறுமை சிவப்பு கறுப்பு வட்டம் சதுரம் எனவும், உணல் தினல் செலவு வரவு கூத்து பாட்டு எனவும் இத்தொடக்கத்துப் பொருள் ஆதி ஆறு வகைப்