பக்கம் எண் :

263

இம்பர் உம்பர் இம்மை உம்மை என்றாற் போல்வனவும் அன்ன’ என்றார். தொல். சொல்.410 உரை.

‘அவன் அவள் அவர் என்னும் தொடக்கத்தன ஈறு பகுக்க வேறுபால் காட்டலின் பகுபதமாம் பிற எனின், அவை ஒன்றாய் நின்று ஒருபொருள் ஆவது அல்லது ஈறு பிரித்தால் பகுதி வேறு பொருள் படாமையின் அவற்றிற்கும் பகுதி விகுதித்தன்மை இன்மையின் ஆகா என்க’ என்றார் மயிலைநாதர். நன்.130 உரை.

‘பெயருள்ளும் சாத்தை உடையான் சாத்தன், கொற்றை உடையான் கொற்றன், கூத்தை உடையான் கூத்தன் என்று இவ்வாறு பொருள்படின் அவை பகாப்பதம் ஆகா. இடுகுறி மாத்திரையாய் நிற்கிலே பகாப்பதம் ஆவது எனக் கொள்க’ நன். மயிலை. 130 உரை.

சாத்தன் கொற்றன் என்பனவற்றின் பகுதி சாத்து கொற்று என்பன ஆமேனும் அப்பகுதிப்பொருள் கொண்டு அவற்றிற்குப் பொருள் கொள்ளாமையின், அவற்றைச் சாத்தன் கொற்றன் என இடுகுறிப் பெயராகவே கோடலின், அவையும் பகாப்பதம் எனலே இவர் கருத்தாம்.

கங்கைகொண்டசோழபுரம் முதலியன பிண்டமாய் ஒரே பொருளைக் குறிக்கும் பெயராய் வருதலின், அவற்றையும் பகாப்பதம் என்று கொள்க என்றார்.

சாத்தன் சாத்தி என்ற விரவுப்பெயர்களின் அன் ஈறும் இகரஈறும் அஃறிணைக்கும் பொதுவாய்ப்பொருள் தருதலின், இவற்றைப் பதம் பிரித்துக் காண்டல் ஏலாது என்றார்,

உயர்திணையோடு அஃறிணை விரவிவரும் விரவுப் பெயர்; தொல்காப்பியனார் அல்வழியினை ‘வேற்றுமை அல்வழி’ என விளக்கிக் கூறுவதுபோல, விரவுப்பெயர் உயர்திணையோடு அஃறிணையும் காட்டும் ஆற்றல்