264 உடைய பெற்றியை உட்கொண்டு விளக்கும் முகத்தான், ‘அஃறிணை விரவுப் பெயர்’ என்றே விரவுப் பெயருக்கு இயற்கை அடை புணர்த்து அஃறிணை விரவுப்பெயர் இயல்புமார் உளவே’ தொல். 155 ‘அஃறிணை விரவுப்பெயர்க்கு அவ்வியல் நிலையலும்’ தொல். 157 ‘கிளந்த இறுதி அஃறிணை விரவுப்பெயர் தொல். சொல். 150 என எழுத்துப் படலத்தும் சொற்படலத்தும் அதன் உண்மைத் தன்மைத் தோற்றத்தைக் கூறியதை நச்சினார்க்கினியர் விளக்கி உள்ள செய்தியை (தொல்.155 உரை) உளங்கொண்டு இவ்வாசிரியர் விரவுப் பெயரை உயர்திணையோடு அஃறிணை விரவிவரும் பெயர் என்று குறிப்பிட்டது உணரத்தக்கது. ஒத்த நூற்பாக்கள்: ‘பகுப்பால் பயனற்று இடுகுறி ஆகி முன்னே ஒன்றாய் முடிந்துஇயல் கின்ற பெயர்வினை இடைஉரி நான்கும் பகாப்பதம்.’ நன். 130 ‘மொழிப்பெயர் வினையென மொழியப் படுமே.’ மு. வீ. மொ.4 ‘பொருள்இடம் காலம் சினைகுணம் தொழிலொடு வருவது பெயரென வழுத்தப் படுமே.’ பகுபதம்- இயல்பும் வகையும் 41. பகுபதம் பகுக்கும் பண்பிற்று ஆகி வினையே வினைப்பெயர் எனஇரு பாற்றே. இது பகுபதத்தினது இயல்பும் அதன் பகுதியும் உணர்த்துகின்றது. இ-ள்: மேற்கூறிய பகுபதம் பகுதி விகுதி முதலியவாகப் பகுக்கப்படும் இயல்பினை உடைத்தாகி, வினையும் வினைப்பெயரும் என இரண்டு வகையினை உடைத்து என்பதாம் என்றவாறு |