பக்கம் எண் :

265

ஈண்டு வினையை முற்கூறினார், அது காரணமாக வரும் பெயர் என்பது அறிவித்தற்கு, வினை என்றது, ஈண்டுத் தெரிநிலை வினைமுற்றும் குறிப்பு வினைமுற்றும். சிறுபான்மை பெயரெச்ச வினையெச்சங்களும் உடன்கோடலும் ஒன்று. இவற்றின் இயல்பு எல்லாம் மேலைச் சொல்லோத்தினுள் காண்க.

வரலாறு: நடந்தான் நடக்கின்றான் நடப்பான் எனவும், குழையல் நிலத்தன் வேனிலான் தோளான் செய்யன் ஊணன் என முறையே முக்காலமும் காட்டும் வினைமுற்றுப் பகுபதமும், பொருள்ஆதி ஆறும் காரணமாகத் தோன்றும் வினைக்குறிப்புமுற்றுப்பகுபதமும் வந்தவாறு காண்க. பிறவும் அன்ன.

இவற்றையே பகுத்துக்கூறி, இருவகை வினைப் பெயர்க்கும் உதாரணம் ஆமாறு காண்க.

நடந்தவன் நடக்கிறவன் நடப்பவன் செய்யவன் கரியவன் என வினை வினைக்குறிப்புப் பெயர்ப்பகுபதமும் ஈண்டே அடக்கிக்கொள்க. 4

விளக்கம் : வினையை முற்கூறினார், வினைமுற்றுப் படுத்தல் ஓசையால் வினையால் அணையும்பெயர் ஆகும் ஆதலின். நடந்தான் முதலிய மூன்றும் முக்கால வினைகளுக்கும் எடுத்துக்காட்டு.

குழையன் - பொருட்பெயர் அடிப்படையாகத் தோன்றிய முற்று.

நிலத்தன் - இடப்பெயர்    ,,   ,,

வேனிலான் - காலப்பெயர்    ,,   ,,

தோளான் - சினைப்பெயர்    ,,   ,,

செயலன் - பண்புப்பெயர்    ,,   ,,

ஊணன் - வினைப்பெயர்    ,,   ,,