பக்கம் எண் :

268

பொதுவாகிய சொல்லினை ஒன்றற்கே உரியது ஆக்குதற்கு வந்த இவ் ‘இன்சாரியை’ பொருள்நிலைக்கு உதவியதாம்.

எல்லாம் என்பது உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவான பெயர். அஃது அற்றுச்சாரியை பெற்று எல்லாவற்றையும் என வரின், ஆண்டு எல்லாம் என்பது அஃறிணைச் சொல்லாம். எல்லா நம்மையும் என நம்முச் சாரியை பெற்றுவரின், எல்லாம் என்பது உயர்திணைச் சொல்லாம். எனவே, அற்று நம் என்பன பொருண்மை காட்டின.

கார்த்திகை என்பது திங்கள் நாள் இரண்டற்கும் பொதுவாகிய பெயராம். கார்த்திகையான் கொண்டான் என்புழி, கார்த்திகை நாளினை உணர்த்தும்; கார்த்திகைக்குக் கொண்டான் என்புழி, குகரச்சாரியை திங்களை உணர்த்தும். இவ்வாறு ஆன்சாரியையும் குகரச்சாரியையும் பொருண்மை சுட்டின. பிறவும் அன்ன.

ஒரே பகுபதத்தில் இவை ஆறும் வரல்வேண்டும் என்பது இன்று என்பது.

சாவிவிகாரம்
கூனன்-கூன்அன்
வைதான்-வைத்ஆன்
வைத்தான்-வைத்த்ஆன்
வைத்தனன்-வைத்த்அன்அன்
நடந்தனன்-நடத் (ந்)த்அன்அன்ந்

என்ற எடுத்துக்காட்டுகளால் உணர்க.

இடைநிலை முதலியபற்றி மயிலைநாதர் கூறுவது: (நன். 32 உரை)