267 இவற்றுள் பகுதி பெரும்பாலும் வேறுபடாது முதற்கண் நிற்பது; விகுதி வேறுபட்டு இறுதிக்கண் நிற்பது; இடைநிலை பெரும்பாலும் இனையது இத்துணையது என்று அளத்தற்கு அரியதாய்ப் பதம்முடிப்புழிக் காலமும் பொருண்மையும் காட்டி ஆண்டே காணப்படுவது; சாரியை அன் ஆன் முதலாக எடுத்து ஓதப்பட்டு எல்லாப் புணர்ச்சிக்கும் பொதுவாய்ச் சிறுபான்மை பொருள் நிலைக்கு உதவி செய்து பெரும்பாலும் இன்னொலியே பயனாக வருவது; சந்தி இன்னது வந்தால் இன்னது இன்னதாம் எனப் புணர்வுழித் தோன்றும் செய்கை; விகாரம் செய்யுள் தொடையும் பதத்துள் அடிப்பாடும் ஒலியும் காரணமாக வலித்தல் மெலித்தல் முதலாக ஆக்குவது. இஃது இடைநிலை முதலியவற்றான் முடியாதவழி வருவது. ‘ஏற்பன’ எனவே. ஒன்றற்கே இவை ஆறும் வரவேண்டும் என்னும் யாப்புறவு இல்லை என்பதூஉம் பெற்றாம். 5 விளக்கம்: இடைநிலை காலம் காட்டுவது- செய்தான் என்புழித் தகர ஒற்றாகிய இடைநிலை இறந்த காலம் காட்டுவது போல்வது. பொருண்மை காட்டுவன-அறிஞன் என்ற சொல்லில் உள்ள ஞகர இடைநிலை போல்வன. சாரியை பொருள்நிலைக்கு உதவுதல் ஆவது-சே என்பது மரத்தினையும் எருதினையும் உணர்த்தும் பல பொருள் ஒரு சொல்லாம். கோடு என்பது கிளையினையும் கொம்பினையும் உணர்த்தும் பலபொருள் ஒரு சொல்லாம். எருதின் கோடு என்பதற்குச் சேவின் கோடு எனவும். சேமரத்தின் கிளை என்பதற்குச் செங்கோடு எனவும் புணர்த்தல் வேண்டும். ஈண்டு் இன் சாரியை வந்து அடைவதால், சே என்பது எருதினைக் குறிக்கும் சொல்லாதல் உணரப்படும். இவ்வாறு பல பொருளுக்கும் |