பக்கம் எண் :

270

இவ்விகுதி முதலிய புணர்ப்பைச் சார்ந்து ஆண்டைக்கு இயைந்து நிற்றலின் சாரியை என்றும், நால்வகைச் சொல்லும் ஒன்றோடுஒன்று சந்தித்தலான் வரும் தோன்றல் திரிதல் கெடுதல்களைச் சந்தி என்றும், செய்யுள் தொடைமுதலியவற்றான் வலித்தல் மெலித்தல் முதலாக. விகாரப் படுத்தலின் விகாரம் என்றும் பெயர் பெற்றன’ என்று குறிப்பிடுகிறது. நன்.133

ஒத்த நூற்பா :

‘பகுதி விகுதி இடைநிலை சாரியை
சந்தி விகாரம் ஆறினும் ஏற்பவை
முன்னிப் பணர்ப்ப முடியும்எப் பதங்களும்’           நன்.133

இயற்றுதல் கருத்தாவின்

தெரிநிலை வினைமுற்றுப் பகுதி

43. நடவா மடிசீ விடுகூ வேவை
நொ போ வௌஉரிஞ் உண்பொருந் திரும்தின்
தேய்பார் செல்வவ் வாழ்கேள் அஃகு என்று
இன்னவை முதலா எல்லா வினையும்
தெரிநிலை வினையின் முதல்நிலை ஆகும்.

பகுபதம் முடித்தற்கு உரியகருவி ஆறனுள் பின்னைய மூன்றும் மேல்புணரியலுள் பெறப்படுதலின், அவை ஒழித்து ஏனைய கூறுவனவற்றுள். இது நிறுத்தமுறை யானே இயற்றும் வினைமுதலும் ஏவும் வினைமுதலும் என்னும் இருவகை வினைமுதலினுள் இயற்றும் வினை முதலான் நிகழ்த்தப்படும் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதத்திற்கு உரிய பகுதி கூறுகின்றது.

இ-ள்: நட என்பது முதல் அஃகு என்பது ஈறாகக் கிடந்த இவ்வியல்பினவற்றை முதலாக உடையவாய் இவ்வாறு வரும் எல்லா வினைச்சொற்களும் இயற்றும்.